டிராப் பாக்ஸின் உதவி வழியே புதிய கடவுச் சொல்லாக உங்கள் முகத்தை மாற்ற முடியும்:
1,062 total views
விண்டோவ்ஸ் 10 அதன் பதிப்பினை வெளியிட்டதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக செயலிகள் பலவற்றையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் டிராப் பாக்ஸ் அதன் விண்டோஸ்-10இற்கான “விண்டோவ்ஸ் ஹலோ” என்ற செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. டிராப் பாக்ஸ் என்பது இணையத்தில் நமது முக்கியமான கோப்புகளை சேமித்து வைப்பதற்கான ஒரு தளமாகும். இவற்றில் இரண்டு வகையில் தரவேற்றம் செய்யலாம், ஈமெயில் போல இணைய பக்கத்தில் லாகின் ஆகி தரவேற்றம் மற்றும் தரவிறக்கம் செய்யலாம். தங்கள் கணினியில் இருக்கும் கோப்புகள், புகைப்படம், திரைப்படம், மென்பொருள் என அனைத்தையும் டிராப் பாக்ஸில் ´ ட்ராக் அண்ட் டிராப் ´செய்துவிட்டால், உலகில் எந்த மூலையில் இருந்தும் அதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இது சமீபத்தியமாக மைக்ரோசாப்ட் வெளியிட்ட ஆபரேட்டிங் சிஸ்டத்தினை கருத்தில் கொண்டு மாத்திரைகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டது. இந்த டிராப் பாக்ஸ் கவனிக்கத்தக்க ஒரு மாபெரும் மாற்றத்தை அறிமுகப்படுத்தியது.

Comments are closed.