கூகுளின் முன் கூட்டியே பேக் செய்யப்பட்ட பதில்கள் :

24

கூகுள் தற்போது பேக் செய்யப்பட்ட பதில்களை இன்று வெளியிட்டுள்ளது .இதன் மூலமாக உங்களுக்கு பதிலளிக்க நேரம் இல்லாதபோது இந்த முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பதில்கள் உங்களுக்கு உதவும்.இந்த வார்ப்புருக்களை (டெம்ப்ளேட்ஸ் ) இனிமேல் ios &அன்றாய்டு போன்களில் அடுத்த வாரத்திலிருந்து பயன்படுத்த தொடங்கலாம். இந்த வார்ப்புருக்கள் பயனர்களின் பயன்பாட்டிற்கேற்ப கூடுதல் அம்சங்களை தரவல்லது என கூகுல் மென்பொருள் பொறியியலாளர் திரு.பேலின் மிக்லாஸ் கூறியுள்ளார்.

SmartReply_B_work_02_w_phoneஇந்த ஸ்மார்ட் பதில்கள் உங்களுக்கு, நீங்கள் பெறும் மின்னஞ்சல்களுக்கு ஏற்ப சிறப்பான 3 பதில்களை  பரிந்துரைக்க உள்ளது . இதனால் அனுப்புநர்களும் பெருநர்களும் உடனடி பதிலளிப்புகளால் குறிப்பிட்ட செய்தியினைப் பற்றிய விரைவான பதிலை நேரத்தை வீணடிக்காமல் டைப் செய்யாமலே பெறுங்கள் .கூகுள் இதற்கு முன் ஒரு வருடத்திற்கு முன்னர் இன்பாக்சினை வெளியிட்டது .இதனால் அனைவரும் அவர்களது மொபைல் சாதனங்களில் இன்பாக்ஸ் அம்சத்தை அணுகினர் . தற்போது இன்பாக்ஸில் பல மின்னஜ்சலுக்கு பதிலளிக்கும் அம்சங்களையும் சேர்த்து வருகிறது .

ஏற்கனவே காலம் தாழ்த்தி பதிலளிக்கும் அம்சங்களையும் பல பயன்பாடுகள் கொண்டு வந்திருப்பினும் இந்த பயன்பாடு முந்தைய பதிப்புகளைப் போலல்லாமல் செயற்கை நுண்ணறிவின் உதவியால் நமக்கு வரும் மின்னஜல்களுக்கு ஏற்ப பதிலளிக்கும் திறன் கொண்டது என கூகுள் பொறியியாளர்கள் கூறுகின்றனர்.இதனால் மிக முக்கிய பிரமுகர்கள் , வணிகவியலாளர்கள் போன்றோர் இந்த அம்சத்தில் அதிகம் பயனடையலாம்.

You might also like

Comments are closed.