T.Kallupatti NGO nagar
பயிர்களுக்கு பூச்சிக் கொல்லி என்ற பெயரில் தெளிக்கப்படும் கொடிய நச்சுத்தன்மையுடைய வேதிப் பொடிகளால் அன்றாடம் நாம் உண்ணும் உணவு நஞ்சாகிவிட்டது. தினசரி நாம் உண்ணுகிற உணவில் 15 விதமான வேதி நச்சு பொருட்கள் கலந்திருக்கிறது. அதிலுள்ள 12 விதமான வேதி நச்சு பொருட்கள் உலக அளவில் தடை செய்யப்பட்டுள்ளதென்று அரசு சார்புடைய ஆய்வு ஒன்று தெரிவிப்பதாக மருத்துவர் கு.சிவராமன் குறிப்பிடுகிறார். இந்த நஞ்சை சாப்பிட்டு சாக வேண்டுமென்று நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்ன தலையெழுத்து இருக்கிறது. உணவு யுத்தத்தை பன்னாட்டு கும்பணிகள் நம் மீது நடத்திக் கொண்டிருப்பதை அறியாமல் அவசர வாழ்வில் நாம் மூழ்கிவிட்டோம். சொந்த நாட்டு மக்கள் நஞ்சு கலந்த உணவை சாப்பிடுகிறார்கள் என்ற துளி எச்சரிக்கையும் இல்லாமல் பன்னாட்டு கும்பணிகளின் நலனுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கிறது நாம் தேர்ந்தெடுத்த அரசுகள். உற்று நோக்கினால் உணவு தயாரிப்பிலும் நம் அடிப்படை தண்ணீர் தேவையிலும் நம்மிடம் இருந்த தற்சார்பு உடைக்கப்பட்டிருப்பதை உணர முடியும். இப்பொது நமக்கு தேவை இந்த அடிமை நிலையிலிருந்து விடுதலையும், தற்சார்பும்.
நம் வீட்டு தோட்டத்தில், சிறுதுண்டு காலி நிலத்தில், மாடியில் என நமக்கு தேவையான நஞ்சில்லாத உணவை நாமே தயாரித்து கொள்ளுதல்தான் தற்சார்பு வாழ்வுக்கான முதல்படி. அதை கருத்தில் கொண்டு, கல்லுபட்டி அருகிலுள்ள இயற்கை வேளாண் அறிஞர் திரு.பாமயன் அவர்களின் பண்ணையில் காய்கறி மற்றும் மாடித்தோட்ட பயிற்சி முகாமை வருகிற 07.12.14, ஞாயிறு அன்று நடத்துகிறோம். ஒரு வேளை உணவு, சிற்றுண்டி, தேநீர், பயிற்சிக்கு தேவையான பொருட்கள என ஒரு நபர் பயிற்சிக்கு தேவையான செலவாக ரூபாய் 200 வரையறை செய்யப்பட்டுள்ளது. முதலில் முன்பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிப்பதற்கான வசதியுள்ளது. விருப்பமுள்ள நண்பர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ளுங்கள். தற்சார்பு வாழ்வுக்கான முதல்படியை எடுத்து வைக்க அழைக்கிறோம். வாருங்கள்!!