பைத்தியம் பிடித்த பிரனாப்: புதிய சேவை வரி அறிமுகம்.

658

 3,044 total views

வெளிநாட்டு பணம் அதிக அளவில் நம் நாட்டிற்கு வந்தால் தான்  குழிக்குள் சென்று கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியும். ஆனால் தனிமனிதர் எவரேனும் அயல் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பினால் அதற்கு 12.36 % புதிய சேவை வரி விதிக்க அலோசனை சொல்லி விட்டு பின்  பதவி விலகியுள்ளார் நமது புதிய ரப்பர் ஸ்தாம்ப்.

அயல்நாடு வாழ் இந்தியர் மற்றும் தமிழர் ஆண்டிற்கு 65 பில்லியன் டாலர் அளவிற்கு பணத்தை இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள். இந்தப் பணம் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களுக்கு தான் அதிக அளவில் அனுப்பப்படுகிறது.

என் சொந்தக்காரன் எவனும் எனக்கு தனிப்பட்ட முறையில் பணம் அனுப்புவதில்லை. ஆனால் பல நாடுகளில் கூலி வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்ற பணம் அனுப்புவோரிடம் அரசாங்கம் பணத்தை அடித்துப் பிடுங்குகிறது.  இந்த வரி எந்த வளரும் வளர்ந்த நாடுகளிலும் இல்லை.

பைத்தியம் பிடித்த இந்த அரசு வட்டிக் கடைக்காரன் போல் வரி வசூல் செய்கிறது. நாமெல்லாம் பயந்து பயந்து வரி கட்ட வேண்டும். ஆனால் அந்தப் பணமெல்லாம் அரசு அலுவலக கக்கூஸ் கழுவ லட்ச லட்சமாக போகும்.

வருடத்திற்கு 2 லட்சம் (மாதம் Rs. 16600) அதிகமாக சம்பாதிக்கும் அனைவரும் திருடர் போல் பார்க்கப் படுகின்றனர்.

வீடு வாடகை : Rs. 5000
வராத கரண்ட் : Rs. 400
மளிகை:      : Rs. 2500
காய்கறி      : Rs.   800
பால்         :  Rs. 950
காஸ்        : Rs.   500
பெட்ரோல் எழவு: Rs. 800
மொபைல் போன்: Rs. 300
குழந்தை (குழந்தைகள்) இருந்தால் +2500

இதுவெல்லாம் போக,

  • கல்யாணம்,
  • காது குத்து,
  • இழவு,
  • கருமாதி,
  • பழய கடன்,
  • புதிய கடன்,
  • ஆஸ்பத்திரி செலவு,
  • கோவில் வெளியே, அரசு ஊழியர்க்கு அதிகாரப் பிச்சை கொடுப்பது,
  • அவசர ஆட்டோ செலவு,

இதில் குடிகார நாய்களின் Tasmac செலவு சேர்க்கப்படவில்லை.

இவ்வளவும் பண்ணி,  இவணுகளுக்கு தெருவுல பிச்சை எடுத்து தான் வருமான வரி கட்டனும்.

மாத வருமானம் Rs. 30000 – Rs. 40000 அதிகம் இருந்தால் மட்டும் வரி கட்டினால் போதும் என வைக்க வேண்டும்.  வருமானம் அயல் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருகிறதென்றால் எந்த வரியும் இருக்கக் கூடாது.

இருக்கும் வரி வருமாணத்தை திறம்பட மற்றும் நேர்மையாக செலவழிககத் தெரியாத இந்த அரசியல் திருடர்களை காசு மாலை போட்டு தங்கச் சுரங்கத்தில் புதைக்க வேண்டும் உடனடியாக.

இந்த புதிய சேவை வரி திட்ட அளவில் உள்ளது. இது போன்ற முட்டாள்தனமான கொள்கைகள் நமது பொருளாதாரத்தை கண் முன்னே அழிக்கும் விதமாக உள்ளது.

நாடு தழுவிய வரிகள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

 

You might also like

Comments are closed.