Web Camera ஒரு செய்தி
1,532 total views
Web Cameraவை கண்காணிப்பு cameraவாக மாற்றலாம். என்ன
ஆச்சரியமாக உள்ளதா? இதற்கென்றே உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. புதிதாக எந்தக் கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும் தேவையில்லை. எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் Web Cameraவை கண்காணிப்பு cameraவாக மாற்றலாம்.
இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். அடுத்து முகப்பு திரையில் இருக்கும் Protect now என்று இருக்கும் button அழுத்தி ஒரே நிமிடத்தில் நம் web cameraவை கண்காணிப்பு cameraவாக மாற்றலாம். ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் cameraவில் ஏதாவது மாற்றம் (detects motion) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் நினைவுட்டும். அந்த மாற்றமும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. ஆள் இல்லாத இடம் அல்லது locker இருக்கும் இடங்களில் இது போன்ற web cameraவை கண்காணிப்பு cameraவாக மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும். தள முகவரி http://cammster.com/
Comments are closed.