ஸ்நாப்சாட்டின் ஸ்லோமோசன் வீடியோக்கள் :

491

 685 total views

இளைங்கர்களின் கவனத்தை ஈர்பதற்காகவே ஸ்நாப்சாட் அறிமுகபடுத்தியுள்ளது . ‘speed modifiers’ அதாவது வேகத்தின் அளவை நமக்கு பிடித்தாற்போல் மாற்றிக் கொள்ளும் கருவிகள் . இதில் நீங்கள் அன்றாய்டு மற்றும் ஐபோன்களில் எடுக்கும் வீடியோக்களில் அதன் காட்சிகளை மெதுவாகவும் வேகமாகவும் முன்னோக்கியும் அல்லது பின்னோக்கியும் காணலாம். அதற்கு நீங்கள் வீடியோவை எடுத்த பின்னர் பக்கவாட்டில் விளிம்பில் தேய்ப்பதன் மூலம் வீடியோவை நீங்கள் விரும்பிய வேகத்திற்கு ஸ்நாப்சாட்டில் காணலாம்.

snapchat-press-and-holdசாதரணமாக இதில் இரண்டு வகையான வீடியோக்கள் உள்ளன.இன்ஸ்டாகிராமின் பூமரிங் பயன்பாட்டைப் போலல்லாமல் வீடியோக்களை ஒன்று முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செலுத்தி மகிழலாம். மேலும் இன்று ஸ்நாப்சாட் 3-d டச் அனுபவத்தை ஐபோன் 6s மற்றும் 6s ப்ளஸ்களில் சேர்த்துள்ளது.உங்கள் மொபைலில் நீங்கள் ஸ்நாப்சாட்டை திரையில் ஒரு கடின அழுத்தத்தை தரும்போது அது உடனடியாக புகைப்படங்களை அனுப்பவா ? அல்லது புதிய நண்பர்களை சேர்க்கவா ? என்ற இரு வாய்ப்புகளை உங்கள் முன் தரும்.
இந்த வேகமாற்றிகளால் மக்கள் தங்கள் செல்பிக்களையும் முக்கியமான தருணங்களையும் இந்த கருவியில் செலுத்தி சுவாரஸ்யமாக மாற்றுவதுடன் மட்டுமல்லாமல் உங்கள் நண்பருக்கும் அனுப்பலாம். ஸ்நாப்சாட்டின் இந்த நுட்பத்தால் அதிக பயனர்கள் இதை அணுகுவர் .அதனால் விளம்பரதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

முதலில் அவர்கள் வாசகங்கள் , வரைபடங்கள் , வடிகட்டிகள் , மற்றும் காலநிலைகளை மாற்றி அமைக்கும் நுட்பத்தையே அறிமுகபடுத்தினர். தற்போது ஸ்நாப்சாட் ஒவ்வொறு இடங்களுக்கு ஏற்ற பூகோள வடிகட்டிகளை அறிமுகபடுத்தி உள்ளது. இதில் நகரங்களின் பெயர்களையே அல்ல்லது அருகிலிருக்கும் நில குறிப்புகளையோ காணலாம்.

snapchat-lenses
இதனால் குறிப்பிட்ட வியாபாரங்களை எடுத்து அதனுடன் ஈமோஜி பட்டன்களையும் பொறுத்தி உங்களுக்கு ஏற்ற வகையில் புகைப்படங்களை மாற்றிக் கொள்ளலாம் . கடந்த மாதம் ஸ்நாப்சாட் லுக்சரி என்ற அணிமேசன் நுட்பத்தை வழங்கி உங்கள் முகத்தை ரோபோவாகவும் அல்லது மீனாகவும் அல்லது உங்களுக்கு பிடித்த ஒன்றாகவும் மாற்றக்கூடிய அம்சத்தைக் கொண்டு வந்தது.தற்போதுள்ள இந்த புதிய வேக மாற்றிகள் இதிலிருந்து சற்று மாறுபட்டதே .
இந்த ஸ்நாப்சாட் வடிகட்டிகள் எப்படி வேலை செய்யும் :
மெதுவான இயக்க நிலை :
இதில் உங்களின் வீடியோ காட்சிகளின் வேகத்தை குறைத்து ஒரு சிறு அசைவை கூட நீங்கள் தெளிவாக காணும்படி செய்கிறது.
வேகமாக இயக்க :
இது உங்கள் வீ டியோவை வேகமாக இயக்கும். உதாரணமாக நீங்கள் மாடியிலிருந்து மெதுவாக குதித்தால் மிக வேகமாக குதிப்பது போன்று காட்டும் .
திருப்பி காட்டுதல்:
உங்கள் வீடியோக்களை ஒரே வேகத்தில் ஆனால் பின்னோக்கிய நிலையில் காட்டும்.
இவையனைத்தும் கற்பனைத்திறனின் பிரதிபலிப்பாக உள்ளது.

snapchat-video-filters

ஸ்நாப்சாட்டின் இந்த புதிய கருவியால் நாம் சாதரணமாக வீடியோ காட்சிகளை கண்டு ரசிப்பதற்கும் மற்றும் ஸ்நாப் சாட்டில் துணைபுரியும் அம்சத்தோடும் காணுவதற்கும் வேறுபாடுகள் உள்ளது. இனி நமக்கு பிடித்த காட்சிகளை விருப்பதிற்கேற்றவாறு வேகத்தை மாற்றியமைத்து ரசிக்கலாம். இது பயனர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கலாம்.

You might also like

Comments are closed.