புகைப்படத்தை கொடுத்து கூகுளில் தேடுங்கள்

440

 964 total views

இது வரை நாம் கூகுளை புகைப்படங்களை தேட பயன்படுத்தி இருக்கிறோம் ஆனால் இன்று ஒரு புகைப்படமே நமக்கு கூகுளில் தேட பயன்படுகிறது. அதாவது ஒரு புகைப்படத்தை குடுத்தால் அதன் முழு விவரங்களையும் உங்களுக்கு கூகுள் தேடிக் கொடுக்கும்.

எதற்காக இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது

உங்களிடம் ஒரு புகைப்படம் இருக்கிறது அது எதைப் பற்றியது எங்கிருந்து வந்தது என்று உங்களுக்கு தெரியவில்லை, இப்பொழுது அந்த புகைப்படத்தை கூகுளில் கொடுத்தால் உங்களுக்கு அனைத்து தகல்வகளியும் திறாடி தந்துவிடும். உதாரணத்திற்கு தலைவர்களின் படம், அல்லது சுற்றுலா தளத்தின் படம் .

இது பிரம்மிப்பூட்டும் தொழில்நுட்பம் தானே ?

நிச்சயமாக இது நல்ல தொழில் நுட்பம்தான். ஆனால் வில்லங்கமும் உண்டு. ஒருவேளை நீங்கள் இணையத்தில் கிடைக்கும் புகைப்படங்களை உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் எங்கிருந்து அந்த புகைப்படத்தை எடுத்தீர்கள் என்று எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அதிலும் அந்த புகைப்படமானது காப்புரிமை கொண்டதாக இருப்பின் விள்ளங்கமே.

அவ்வளவுதானா என்று நினைத்துவிடாதீர்கள்

இன்னும் ஒரு ஆச்சரியம் உண்டு , ஒரு வேளை நீங்கள் Facebook , Orkut போன்ற இணையதளங்களில் உள்ளீர்களா இனி உங்கள் புகைப்படங்கள் யாரிடமாவது கிடைத்தாலே போதும் உங்களுடைய புகைப்படத்தை வைத்து உங்கள் Profile ஐ கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இது எல்லா நேரத்திலும் சாத்தியமில்லை. ஒரு வேளை நீங்கள் வேறு ஏதாவது facebook அப்ளிகேசண் உபயோகப்படுத்தினால் இது சாத்தியமாகும்.

You might also like

Comments are closed.