PINTEREST சமூக இணைய தளம் அபார வளர்ச்சி பாதையில்
1,572 total views
சமூக தளங்களின் போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல போட்டிகள் இருந்தாலும் வாசகர்களுக்கு சிறப்பான வசதிகளுடன் வித்தியாசமாகவும் இருந்தால் கண்டிப்பாக வாசகர்களின் அமோக ஆதரவு அந்த இணைய தளத்திற்கு உண்டு என்பதை நிருபித்து காட்டியுள்ளது PINTEREST என்ற சமூக இணையதளம்.
பெரும்பாலான சமூக இணையதளங்களும் ஒரே மாதிரியான வசதிகளை Friends, Chatting, Sharing, like இப்படி ஒரே மாதிரியான கொண்டு இருக்கும். ஆனால் Pinterest சற்று வித்தியாசமானது. ஒரு போட்டோ ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பதை சரியாக பயன்படுத்தியுள்ள சமூக இணையதளம் Pinterest.
சிறப்பம்சங்கள்:
- இந்த தளத்தில் நீங்கள் போட்டோ அல்லது வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும். சாதாரண செய்திகளை பகிர முடியாது.
- இந்த தளத்தின் தோற்றம் பெரும்பாலானவர்களை கவரக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த Pinterest தளத்தில் உங்கள் பிளாக்கில் உள்ள போட்டோக்களை நேரடியாக பகிர்ந்து உங்கள் பிளாக்கின் வாசகர்களை (Traffic) அதிகரித்து கொள்ளலாம்.
- போட்டோ அல்லது வீடியோ பகிரும் பொழுது அதற்கு சம்பந்தமாக தனி தனி பிரிவுகளில் பகிரலாம். மொத்தம் 30 க்கும் அதிகமான வகைகள் இந்த தளத்தில் உள்ளது.
- குறைந்த நாட்களிலேயே மாதத்திற்கு 21 மில்லியன் வாசகர்களை பெறும் சிறந்த சமூக இணையதளமாகும்.

Comments are closed.