Monitor பிரச்சனைகள் குறித்து சில வழிமுறைகள்

961

 2,946 total views

நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது நன்றாக இயங்கிய monitor-ல் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும் வழிக்கே சென்று விடலாம்.

1. முதலில் மானிட்டருக்குச் செல்லும் மின்சாரம் இயக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மிகவும் பழைய, பல ஆண்டுகளுக்கு முந்தைய கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டராக இருந்தால் கம்ப்யூட்டரின் CPU-வில் இருந்தே மானிட்டருக்கு power cable செல்லும்.

இது சரியாகப் பொருந்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும். எதற்கும் ஒரு முறை எடுத்து மீண்டும் சரியாகப் பொருத்திப் பார்ப்பதே நல்லது. தற்போதைய monitor எனில் அதற்கு தனியே power line plug card  இருக்கும். அது சரியானபடி power plug socket-ல் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கவும்.

அந்த பிளக்கிற்குத் தனியான switch இருந்தால் அது on செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மானிட்டருக்கு மின்சாரம்  செல்கிறதா என்பதனை அறிந்து கொள்ள ஒரு சிறிய எல்.இ.டி. லைட் இருக்கும். இது மெலிதான ஆரஞ்ச் நிறத்தில் இருந்தால் மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது ஆனால் கம்ப்யூட்டரின் சிபியூவிலிருந்து சிக்னல் வரவில்லை என்று பொருள்.

2. அடுத்ததாக உங்கள் மானிட்டரில் brightness மற்றும் contrast adjust செய்வதற்கான switch control கொடுத்திருப்பார்கள். இதனை adjust செய்து பார்க்கவும். இவற்றை adjust செய்தால் மானிட்டர் சரியாகலாம்.

3. அடுத்ததாக மானிட்டருக்கு வரும் விடியோ கேபிளைச் சரி செய்து பார்க்கவும். அது சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து மீண்டும் ஒரு முறை கழட்டி மாட்டவும்.

4. இன்னொரு மானிட்டர் கிடைத்தால் அல்லது வீட்டில் இருந்தால் அதனை இந்த CPU-வில் மாட்டிப் பார்க்கவும். வீடியோ கேபிள் பழையதையே மாட்டவும். இப்போதும் சரியாகக் காட்சி கிடைக்க வில்லை என்றால் விடியோ கேபிள் சரியில்லை என்று பொருள். இந்த கேபிளை மாற்றிப் பார்க்கலாம்.

5. முடியுமென்றால் சந்தேகத்திற்குரிய மானிட்டரை இன்னொரு கம்ப்யூட்டரில் பொருத்திப் பார்க்கவும். அப்படியும் மானிட்டர் சரியாக இயங்கவில்லை என்றால் மானிட்டரில்தான் கோளாறு இருக்கிறது என்பது உறுதியாகிறது. கம்ப்யூட்டரில் பிரச்னை இல்லை என்றும் தெரிகிறது.

இந்நிலையில் உங்கள் மானிட்டருக்குப் பதிலாகப் புதிய மானிட்டர் வாங்கிப் பொருத்த வேண்டும். அல்லது மானிட்டரை ரிப்பேர் செய்திட வேண்டும்.

6. இன்னும் சில வழிகளில் மானிட்டர் இயங்காமல் காட்சி அளிக்கும். கம்ப்யூட்டர் boot ஆகும் போதும், பின்னர் காட்சி கிடைக்கும் போதும் தெளிவான காட்சி இல்லாமல் தெரியும். இப்படி குழப்பமான காட்சி இருந்தால் உங்களுடைய display card சரியில்லை என்று பொருள். இதனை மாற்றிப் பாருங்கள். மாற்றப்பட்ட கார்டுடன் காட்சி தெளிவாக இருந்தால் பழைய display card பழுதாகிவிட்டது என்று பொருள். அதனை அப்படியே தூக்கி எறிய வேண்டியதுதான்.

புதிய display கார்டுக்கும் மானிட்டர் சரிப்பட்டு வரவில்லை என்றால் மானிட்டரை மாற்றுங்கள். செகண்ட் ஹேண்ட் மானிட்டரை வாங்க வேண்டாம்.

அதே போல் புதிய மானிட்டரை வாங்குகையில் அன்றைய நிலையில் அறிமுகமாகி உள்ள தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான மானிட்டரை வாங்குங்கள்.

எடுத்துக் காட்டாக இப்போதெல்லாம், CRT எனப்படும் மானிட்டர்களை யாரும் வாங்கிப் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. அவற்றின் இடத்தில் தட்டையான LCD அல்லது LED மானிட்டர்கள் மிகக் குறைவான விலையில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தவும்.

You might also like

Comments are closed.