உங்களது தொழிலுக்கு சம்மந்தமான செய்திகளை மட்டும் வடிகட்டும் மைக்ரோசாப்ட்:

632

 1,443 total views

மைக்ரோசாப்ட்  நிறுவனம்  வெளியிட்டுள்ள  “News Pro”   செயலியின் மூலம் ஒருவரது வேலை  சமமந்தப்பட்ட  அன்றாட  செய்திகளை மட்டுமே தொகுத்து மொபைல் அல்லது கணினி திரைக்கு வழங்க  வழி செய்து வருகிறது .

News Pro ஆனது ஆப்பிளின் Flipboard போன்றே உள்ளது.  ஆம்  Flipboard என்பது வெவ்வேறு சமூக ஊடகங்களிலிருந்து  வித்தியாசமான தலைப்புகளில் 12 மொழிகளில்  மென்பொருள்களை பயன்படுத்தி  செய்தியைச் சேகரிக்கும் ஒரு ஊடகமாகும். இதுபோன்ற  செய்தி சேகரிப்பு செயலிகளனைத்தும்  பயனர்களுக்கு ஆர்வம் மிகுந்த   தலைப்புகளினை   தரம் பிரித்து வழங்கி வந்தது. ஆனால் News Pro ஆனது இதிலிருந்து சற்றே வேறுபட்டு  பயனர்களின்  வேலைக்குத் தகுந்த செய்தித் தொகுப்புகளை தரம் பிரித்து வழங்குகிறது.   முதலில் இந்த செயலியை  அணுகும்போது இது உங்களது பேஸ்புக் அல்லது LinkedIn கணக்குடன் ஒருங்கிணைத்து நீங்கள் எந்த துறையில் ஈடுபட்டுள்ளீர் மற்றும் பயனர் சம்மந்தப்பட்ட மற்ற பிற விவரங்களையும் அறிந்து அதற்கேற்ற  செய்திகளை வழங்குகிறது. அதன் பின்   “speedy”  ஆப்சனையும் கூடவே வழங்குகிறது. “speedy”  என்பது   ஒரு செய்தியை நீங்கள் படிக்கும்போதும் தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை  தவிர்த்து இணையப் பக்கத்தை  வெகு விரைவில்  லோடிங்  செய்து  பார்க்க வழி செய்கிறது.   இது Safariயின் “Reader View”-யில்  ஏற்கனவே  நடைமுறையில் உள்ள நுட்பம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒருவர் தனது தொழில் சம்மந்தபட்ட செய்திகளை அன்றாடம் பெறுவதால் ஒருவரது  தொழிலில் அது ஒரு படி முன்னேறவும் மற்றும் தொழிலோடு இணைந்த சமூக அறிவையும் வளர்க்கும் விதமாக அமையும்.
news-pro-1

           News Pro வினை பிங் செய்திகள்  தான் தற்போது தொகுத்து வழங்கி வருகின்றன. இதன் மூலம் செய்தி தொகுப்புகள் உங்கள் தொழில் துறை சம்மந்தப்பட்ட  பகுதிகளிலிருந்து தரம் பிரித்து வழங்கப்படும்.  மேலும் உங்கள் துறைக்கு சம்மந்தமில்லாத விளையாட்டு, சினிமா, அரசியல், பொழுதுபோக்கு போன்ற செய்திகளையும் பெறலாம்.  News Pro ஆனது நமக்கு விருப்ப்பட்ட செய்திகளை விருப்பட்ட தலைப்புகளின்  அடிப்படையில்  உடனுக்குடன்  விளம்பரகளன்றி  பெறலாம். இந்த செயலியை பயனர்களின் கருத்துகணிப்புகளோடு  அடுத்த கட்ட கூடுதல் அம்சங்களையும்  சேர்க்கவுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளன.

You might also like

Comments are closed.