கூகுளின் வெர்ச்சுவல் ரியாலிட்டியின் பாதை மாற்றியமைப்பு :
736 total views
கூகுள் இதுவரை தயாரித்து வந்த வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பத்திற்கு ஒரு புதிய பாதையை வழிவகுத்து கொடுத்துள்ளது. வெர்ச்சுவல் ரியாலிட்டி என்பது ஒரு அதிவேக மல்ட்டி மீடியா நுட்பத்துடன் ஒரு வீடியோ காட்சியைக் காணும்போது அதில் நாமும் அந்த இடத்தில் உண்மையாக இருப்பது போன்ற உணர்ச்சியைத் தரக் கூடிய ஒன்றே. இந்த கண்ணாடி போன்ற சாதனத்தின் தயாரிப்பினை பல நாட்களாக கூகுள் தயாரித்து வருகிறது. இதற்கென தனியாக அதிகாரி யாரும் நியமிக்கப்படாத நிலையில் தற்போது கார்டு போடிற்கான புதிய பாதையை மாற்றி அமைக்கும் வண்ணம் இதற்கென தனியாக அதிகாரியை நியமித்துள்ளனர்.

ஆம் இனி கூகுளின் வெர்ச்சுவல் ரியாலிட்டி நுட்பத்திற்கு புதிய அதிகாரியாக திரு கிளே பவுரை நியமித்துள்ளது. கிளே பவூர் இதற்கு முன் கூகுளின் செயலிகளான ஜிமெயில் மற்றும் டிரைவ் டாக்குமண்டுகளை கவனித்து வந்தவர். கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கிலே பிளவுரை மேலாண்மை துணைத் தலைவராக நியமித்தார். தற்போது முழுவதுமாக வெர்ச்சுவல் நுட்பத்திற்காக மட்டுமே அதிகாரியாக நியமித்துளார். இனி செயலிகளைப் பொருத்த அனைத்து ஒப்படைப்புகளையும் கூகுளின் மென்பொருள் துறை அதிகாரியும் கூகுல் குழுவின் உறுப்பினரான திரு.டைன் கிரீனிடம் செல்ல உள்ளது. மேலும் கூகுளின் கிளவுட் துறையும் இவரிடமே ஒப்படைக்க உள்ளனர்.
கார்டு போர்டினை அனைவருக்கும் பிரபலபடுத்தும் வகையில் அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு கூகுளின் கார்ட் போர்ட் பற்றிய நுட்பம் பயிற்றுவிக்கப்பட்டு கார்டு போர்டு பிரபலபடுத்தப்பட்டது. இனி கூகுள் பேஸ்புக்கின் ஆக்குலஸ், HTC யின் வைவ் , சோனியின் பிளே ஸ்டேசன் VR ஆகியவற்றிக்கிடையே இந்த வருடம் போட்டியில் களமிறக்க உள்ளது. மேலும் இதுவரை வெர்ச்சுவல் தொழில்நுட்பத்திற்காக செய்த அனைத்து முதலீடுகளையும் இந்த வருடம் மீட்டெடுக்க தயாராக உள்ளது. கூகுளின் இந்த மிகப்பெரும் நடவடிக்கையால் யூ-டியூபின் 360 டிகிரி வீடியோக்களின் சேவையும் இரண்டாகும் என எதிர்பார்க்கபடுகிறது. கூகுளின் வெர்ச்சுவல் ரியாலிட்டி நுட்பத்தினை பொறுத்தவரையில் இதற்கென தனியே ஒரு தலைமை அதிகாரியை நியமித்துள்ள நடவடிக்கை கூகுளுக்கு புதியதொரு வெற்றிப் பாதையை அமைத்து தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.