Google தேடு இயந்திரத்தி​ன் பின்னணியை மாற்ற

620

 1,349 total views

நமக்கு தேவையான தகவல்களை இணையத்தில் தேடுவதற்கு  Google தேடு இயந்திரமானது இன்று அதிகமானோரால் பயன்படுத்தப்படுகின்றது. தேடுதல் மட்டுமன்றி வேறு பல சேவைகளையும் வழங்கும் Google  நிறுவனம் அதிகளவில் பயனர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் முன்னணி வகிக்கின்றது.

அதற்கிணங்க தற்போது Google தேடியந்திரத்தின் பக்கப் பின்னணியை பயனர்கள் தாம் விரும்பிய வண்ணத்தில் மாற்றுவதற்கான வசதியையும் வழங்கியுள்ளது. கீழ்தரப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பின்னணியை மாற்றியமைக்க முடியும்.

1. முதலாவது படத்தில் காட்டியவாறு Change background image என்பதை click செய்யவும்.

2. உங்களது GMail  பயனர் பெயர், கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்  நுழையவும்.

3. நீங்கள் விரும்பிய பின்னணி படத்தை தெரிவு செய்து Select என்பதை click செய்யவும்.

அவ்வளவு தான் நீங்கள் select செய்த படம் background ஆக மாறியிருப்பதை காணலாம்.

 

You might also like

Comments are closed.