Gmail, Facebook Yahoo மூன்றிலும் ஒரே நேரத்தில் Chatting செய்ய

620

 1,472 total views

நாம் நமது நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்கிறோம். இந்த சேவையை பல தளங்கள் வழங்கினாலும் Gmail, Facebook மற்றும் Yahoo இவை மூன்றும் தான் மிகப்பிரபலமான தளங்கள். இந்த தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்ந்தாலும் இந்த மூன்று தளத்திலும் ஒரே நேரத்தில் Chatting செய்ய முடியவில்லை என்பது வருத்தமே. ஏனென்றால் ஒவ்வொரு தளத்திற்கும் நன் நண்பர்களின் வட்டம் மாறும். Gmailலில் யாருடனாவது பேசி கொண்டிருந்தால் Facebook நண்பர்களிடம் Chatting செய்ய முடியாது. Facebookகில் Chatting செய்து கொண்டிருந்தால் Gmail, Yahoo நண்பர்களிடம் அரட்டை அடிக்க முடியாது. இந்த பிரச்சினை இனி இல்லை Gmail, Facebook, Yahoo என மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் Chatting செய்து கொள்ளலாம்.

  • இந்த தளத்திற்கு சென்று புதியதாக உறுப்பினர் ஆகி கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. ஏற்கனவே நமக்கு உள்ள Facebook ID மூலம் உறுப்பினர் ஆகி கொள்ளும் வசதி உள்ளது.
  • ஏதாவது ஒரு முறையில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். உறுப்பினர் ஆகிய உடன் உங்கள் Windowவில் வலது பக்கத்தின் கீழே ஒரு Menu bar போன்று இருக்கும்.

  • Chat with என்ற பகுதியில் Gmail, Yahoo, Facebook மற்றும் ibibo போன்ற iconகள் இருக்கும்.
  • அதில் அதில் ஒவ்வொன்றிலும் click செய்து உங்கள் கணக்குகளில் நுழைந்தால் ஆன்லைனில் உள்ள நண்பர்களின் பட்டியல் உங்களுக்கு காட்டப்படும்.
  • அந்த நண்பர்களுக்கு நேராக அவர்கள் எந்த தளத்தில் ஆன்லைனில் உள்ளார்கள் என கண்டறிய ஏதுவாக அவர்களின் பெயருக்கு நேரே அதற்க்கான Logoக்களும் காண்பிக்க படும்.

  • இதில் உங்களுக்கு தேவையான நண்பரின் மீது click செய்தால் Chat window திறக்கும். அதில் அவருடன் நீங்கள் அரட்டை அடித்து கொள்ளலாம்.
  • மேலும் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்கவும் இதில் வசதியை கொடுத்து இருக்கின்றனர்.

  • இதில் உள்ள Go offline என்பதை கிளிக் செய்தால் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து கொள்ளலாம்.

அவ்வளவு தான் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று நேரத்தை வீணடிக்காமல் ஒரே இடத்தில் அனைத்து நண்பர்களுடனும் பேசி மகிழலாம்.

 

You might also like

Comments are closed.