GMail-ன் புள்ளிவிவரங்கள் அறிய

681

 1,525 total views

பெரும்பாலான இணைய உபயோகிப்பாளர்கள் ஜிமெயிலை பயன்படுத்துகின்றனர். ஜிமெயிலில் ஒரு நாளைக்கு எத்தனை மெயில் அனுப்பி உள்ளீர்கள், உங்களுக்கு எத்தனை மெயில் வந்துள்ளது போன்ற புள்ளி விவரங்களை அறிவது எப்படி என்று இப்பொழுது காணலாம்.

செயல்படுத்துவது எப்படி: 

 முதலில் உங்களின் Google Docs கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Create என்பதை click செய்து அதில் Spread Sheet தேர்வு செய்து கொள்ளவும்.
அடுத்து Spread Sheet open ஆகியவுடன் அதன் பெயரை Gmail Stats என்று மாற்றி கொண்டு Tools ==> Script Gallery என்பதை click செய்யவும்.
அடுத்து இன்னொரு window open ஆகும். அதில் அங்கு இருக்கும் search box-ல் Gmail Meter என கொடுத்து தேடினால் ஒரு வசதி வந்திருக்கும் அதில் உள்ள Install button அழுத்தி install செய்யவும்.
அடுத்து வரும் window-வில் Authorize என்ற button click செய்யவும். பிறகு Grant Access என்பதை click செய்தால் Gmail Meter வசதி கூகுள் டாக்ஸில் சேர்ந்து விடும்.
Spread Sheet திறந்து அதில் உள்ள Gmail Meter என்பதை click செய்து Get Report என்பதை click செய்யவும். இன்னொரு window வரும் Monthly Report என்பதை click செய்தால் ஒரு மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் வரும். அல்லது Custom என்பதை click செய்து உங்களுக்கு தேவையான தேதிகளை தேர்வு செய்து கொள்ளவும்.
உங்களுடைய report ரெடியாகியவுடன் உங்களுடைய ஈமெயிலுக்கு அனுப்பப்படும். இனி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து உங்களுடைய report  உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.
சுலபமாக அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

You might also like

Comments are closed.