GMailல் Google+ Chatஐ Disable செய்வது எப்படி?
1,478 total views
Facebook தளத்தை விட உபயோகிப்பதற்கு எளிமையாகவும், வசதிகளையும் Google + தளம் கொண்டுள்ளது. Google + வட்டத்தில் உள்ள நண்பர்களிடம் Chat செய்யும் வசதியை Google அறிமுகப்படுத்தியது. அந்த வசதியின் மூலம் Google + வட்டத்தில் உள்ள அனைத்து நண்பர்களிடமும் G Mailல் இருந்தே அரட்டை அடித்து மகிழலாம். ஆனால் Google +ல் உள்ள அனைத்து நண்பர்களும் உங்கள் G Mailல் chat listல் வந்துவிடுவது பிரச்சினையாக உள்ளது என்றும் G Mailல் நுழைந்தாலே பெரும்பாலானவர்கள் chat செய்வதால் அவர்களுக்கு பதில் கூற முடியாமல் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாவதாக எண்ணுவதாலும் அதனை disable செய்ய எண்ணுவார்கள். ஆகவே இந்த வசதியை எப்படி ஜிமெயிலில் இருந்து நீக்குவது எனப் பார்ப்போம்.
* இதற்க்கு முதலில் Google + தளத்திற்கு செல்லுங்கள்.
* அங்கு Chat பகுதிக்கு சென்று அங்கு உள்ள ஒரு சிறிய அம்பு குறியை click செய்யவும்.
* உங்களுக்கு ஒரு சிறிய menu உண்டாகும். அதில் உள்ள Privacy Settings என்ற வசதியை click செய்யவும்.
- Privacy Settings கொடுத்தவுடன் உங்களுக்கு இன்னொரு window open ஆகும்.
- அதில் Choose who can chat with you என்ற இடத்தில் உள்ள your circles என்பதை click செய்து Custom என்பதைத் தேர்வு செய்து கொள்ளவும்.
- Google +ல் நீங்கள் உருவாக்கி வைத்துள்ள Circles காணப்படும்.
- அதற்கு நேராக ஒரு சிறிய கட்டங்களில் Tick mark குறி காணப்படும்.
- அதில் அனைத்து குறிகளையும் நீக்கி விட்டால் Google +ல் வட்டத்தில் உள்ள நண்பர்கள் உங்கள் GMail Chat listல் இருந்து நீக்கப்படுவார்கள்.
- குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள நண்பர்கள் மட்டும் chat செய்ய வேண்டுமென்றால் அந்த வட்டத்தை Tick mark செய்து கொள்ளுங்கள்.
- கடைசியில் கீழே உள்ள Save button click செய்து விட்டு GMail வந்து chat list பாருங்கள் Google + நண்பர்கள் நீங்கி இருப்பார்கள்.
- நீங்கள் Email மூலம் சேர்த்த நண்பர்கள் மட்டுமே Email Chat listல் இருப்பார்கள். ஒருவேளை நீங்கள் ஏதேனும் வட்டத்தைத் தேர்வு செய்து இருந்தால் அந்த நண்பர்களும் இருப்பார்கள்.
Comments are closed.