Facebook வழியாக புதிய வகை Virus பரவும் அபாயம்!!
1,434 total views
இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனமொன்று புதிய வகை virus ஒன்று Facebook வழியாகப் பரவி வருவதாக எச்சரித்துள்ளது.
ஏற்கனவே Facebook தளத்தில் தங்கள் கணக்கினைத் திறந்து வைத்து இயங்கும் நபர்களின் கணினியை இது தாக்குகிறது. ஒரு image கோப்பு போல தகவல் அனுப்பப்படுகிறது.
உண்மையில் அது image அல்ல. இதில் click செய்தால் .scr என்ற துணைப் பெயருடன் கூடிய கோப்பு ஒன்று உள்ளது. Click செய்தவுடன் ZeuS crimeware என்ற வகை virus உள்ளே நுழைகிறது.
தற்போது இது Win32.HLLW.Autoruner.52856 மற்றும் Heure: Trojan.Win32.Generic ஆகிய virusகளாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உங்கள் Facebook தளத்தில் எந்த image கோப்பாக இருந்தாலும் அதில் click செய்திடும் முன் ஒருமுறை யோசிக்கவும்.
Comments are closed.