முகநூலில் பெரிய மாற்றம் செய்ய காத்திருக்கும் அந்த இரண்டு அம்சங்கள் :

528

 904 total views

முகநூல் பயனர்களுக்கு  தேவையான செய்தி தொகுப்புகளை முகநூல் பயனர்கள் வெவேறு தளங்களுக்கு சென்று  தேடத் தேவையில்லை. அனைத்து செய்தி தொகுப்புகளும் இனி உங்களை தேடி வரும் . ஆம் ,  உங்கள் மொபைலிலேயே ஊடகத் தொகுப்புகளை காண முகநூல் வழி  செய்து வருகிறது. அதன்படி செய்தி ஊட்டங்களை   ஒவ்வொரு  தலைப்புகளின்  அடிப்படையில் வெவ்வேறு செய்திகளை வழங்கவிருக்கிறது.  இதனால் பயனர்கள் விருப்பட்ட தலைப்புகளில் செய்திகளை தேடலாம் மற்றும்  நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.இந்த புது வகை நுட்பத்தினை முகநூல் facebook  app works யிடமிருந்து  கடன் வாங்கியுள்ளது.இதனை தற்போது சோதனை ஓட்டம் பார்த்து வருகின்றனர் . விரைவில் அனைத்து பயனர்களும் அணுகும்படி செய்ய உள்ளது.
facebook_marketplace_official
மேலும் அடுத்ததாக  ஷாப்பிங்  பிரிவினையும் எளிதில் அணுக வழி  செய்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே   முகநூல்  சாப்பிங் நுட்பத்தில் செயல்பட்டு வருகிறது. இன்று வரை சாப்பிங் பிரிவு மறைக்கபட்ட  ஒன்றாகவே உள்ளது.இதனை முகநூலில்  முக்கியமாக அனைவரும் காணும்படியாக    அறிவிப்பு  (நோட்டிஃபிகேசன்  )மற்றும்  கோரிக்கை (ரிக்குவஸ்ட் ) ஆகிய  இரண்டு  பட்டன்களிற்கும்  நடுவே   உள்ள  குறுந்தகவலுக்கு (மெசேஜ்)க்கு பதிலாக  பதிக்க  உள்ளனர். முகநூளின் முன் பக்கத்தில் பதிக்க உள்ளதால் பயனர்களிடையே  புதிய சாப்பிங்  அனுபவத்தை உருவாக்கவும்   விற்பனையாளர்களிடம்  நேரடி தொடர்பு கொள்ளவும் வழிவகுக்கிறது.  மேலும் வெவ்வேறு  தளங்களுக்கு சென்று ஷாப்பிங்  செய்யாமல் அனைத்து விற்பனை தளங்களையும் ஒரே இடத்தில் காணவும் உதவுகிறது. இந்த இரண்டு  முக்கிய நுட்பத்தால்     இதற்கு முன்  முகநூலை அணுகியதை விட  அதிகமாக முகநூலில் நேரத்தை செலவிட வாய்ப்புகள் உள்ளன.

You might also like

Comments are closed.