Chrome-ல் ஏற்படும் Shockwave plug-in crashes பிழையை சரி செய்வது எப்படி?

795

 1,726 total views

Google நிறுவனம் வழங்கும் Chrome browser தற்பொழுது பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் வேகம், எளிமை, வசதிகள் போன்றவற்றால் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரவுசராகும். அதிகம் பயன்படுத்துபவர்கள் வரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ள சிறப்பு மிக்க பிரவுசர் Chrome browser. சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதனை பயன்படுத்தும் பொழுது சில பிழைகளை சந்தித்து இருப்போம். அதில் Shockwave Plug-in crashed என்ற பிழையும் அடிக்கடி உருவாகும். இந்த பிழையை எப்படி சரி செய்வது என பார்ப்போம்.

பிழையை சரிசெய்வது எப்படி:
Adobe flash கணினியில் இரண்டு இடத்தில் install ஆகி இருக்கும். கணினியிலும் (OS Installation), குரோம் உலவியிலும் (Internal Flash Installation) install ஆகி இருக்கும். ஏதாவது ஒரு தளத்தை open செய்யும் பொழுது இவை இரண்டிற்குள் நடக்கும் குழப்பமே இந்த பிழை வரக் காரணமாகிறது. இதில் ஒன்றை (Internal Flash Installation) செயலிழக்க வைத்து விட்டால் இந்தப் பிழை வராமல் தடுக்கலாம்.
  • இதுவரை உங்களுக்கு இந்தப் பிழை ஏற்ப்படவில்லை எனில் நீங்கள் எதுவும் மாற்றம் செய்ய வேண்டாம். பிழை ஏற்ப்படுபவர்கள் குரோம் உலவியை திறந்து address bar-ல்  chrome://plugins என type செய்து enter கொடுக்கவும்.
  • உங்களுக்கு ஒரு window open ஆகும். கீழே படத்தில் காட்டி இருக்கும் இடத்தில் உள்ள + Details என்பதை click செய்யவும்.
அடுத்து கீழே இருப்பதை போல window இருக்கும். அதில் Flash (2 files) என்ற பகுதி கீழே இருப்பதை போல இருக்கும்.
  • Location என்பதில் உள்ள URL வைத்து இரண்டையும் சுலபமாக வேறுபடுத்தி பார்க்கலாம். மேலே படத்தில் காட்டியுள்ள (Chrome Internal Installation) பகுதியில் உள்ள Disable என்பதை click செய்யவும்.
  • Disable click செய்தவுடன் உங்கள் window கீழே இருப்பதை போல இருக்கும்.

  • Disable செய்தவுடன் உங்களுடைய window-வை மூடிவிட்டு திரும்பவும் open செய்து கொள்ளவும். இனி இந்த பிழை ஏற்படாது.
Note1: இதனை disable செய்வதால் Chrome browser-ன் புதிய பதிப்பு வெளியிட்டவுடன் automatic update  ஆகாது. புதிய பதிப்பை நீங்களே download செய்து install செய்யவேண்டும்.
Note2: Chrome உலவியை update செய்து விட்டால் இந்த நீட்சி திரும்பவும் வேலை செய்ய ஆரம்பித்து விடும். திரும்பவும் இதை Disable செய்யவேண்டும்.

You might also like

Comments are closed.