Adsense Publisher Toolbar
1,767 total views
இணையத்தில் இணையதளங்கள் மூலம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் Google Adsense விளம்பர சேவையே பலரும் விரும்புகின்றனர். நேர்மையாலும், பணம் அதிகமாக கொடுப்பதாலும் இன்றும் இணையத்தில் சம்பாதிக்க அனைவரின் விருப்பம் Adsense தான். தற்பொழுது Google-ன் Adsense விளம்பரம் மூலம் லட்சக்கணக்கான இணையதளங்கள் வருமானம் ஈட்டி வருகின்றன.
AdSense உபயோகிப்பவர்கள் தங்களின் status பார்க்க ஒவ்வொரு தடவையும் AdSense தளத்தின் login செய்து பார்க்க வேண்டும். Blogger கணக்கு ஒரு E-mail ID-ல் இருக்கும். AdSense ஒரு ID-ல் இருக்கும். ஒவ்வொரு முறையும் signout செய்து வேறொரு ID-க்கு சென்று பார்க்க வேண்டும். இது போன்ற பிரச்சினைகளை தீர்க்க Google நிறுவனம் AdSense உபயோகிப்பவர்களுக்கு ஒரு புதிய Toolbar அறிமுக படுத்தி உள்ளது.
நீட்சியை இணைப்பது எப்படி:
- முதலில் இந்த லிங்கில் Adsense Publisher Toolbar சென்று Chrome நீட்சியை download செய்து கொள்ளுங்கள்.
- இந்த நீட்சி உங்கள் browser-ல் install ஆகியவுடன் அதை click செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும். அதில் Allow என்பதை click செய்யவும்.
அடுத்து வரும் window-வில் உங்களின் AdSense ID தேர்வு செய்து கொண்டால் இறுதியில் உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும்.
அவ்வளவு தான் இனி எந்த இடத்தில இருந்தும் எப்பொழுது வேண்டுமானலும் இந்த நீட்சியில் click செய்து AdSense status பார்த்து கொள்ளலாம்.
Comments are closed.