Adobe போட்டோஷாப் மென்பொருளின் புதிய பதிப்பு இலவசமாக

1,237

 4,053 total views

Adobe நிறுவனத்தின் போட்டோஷாப் மென்பொருளை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.  போட்டோ எடிட்டிங் software என்றால் போட்டோஷாப் தான். அதற்கு ஈடான மென்பொருள் இல்லை. உலகம் முழுவதும் போட்டோஷாப் மென்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. வெகுநாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த மென்பொருளின் புதிய பதிப்பான CS6 Beta வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பை அனைவரும் இலவசமாக உபயோகிக்கலாம் என்பது மேலும் ஒரு இனிப்பான செய்தி.

இலவசமாக டவுன்லோட் செய்ய:

 முதலில் http://labs.adobe.com/downloads/photoshopcs6.html இந்த link-ல் சென்று மென்பொருளை download செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் install செய்யும் பொழுது I want to try Adobe Photoshop CS6 for a limited time என்பதை கொடுத்து உள்ளே சென்றால் சீரியல் எண் கேட்காது. இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.
மற்றும் இந்த இலவச பதிப்பை 7 நாட்களுக்குள் activate செய்ய வேண்டும்.  Activate செய்ய Adobe ID மற்றும் password கொடுத்து இலவசமாக online-ல் activate செய்து கொள்ளுங்கள். இதற்கு முன் Adobe ID இல்லை என்றால் புதிதாக உருவாக்கி கொண்டு activate செய்து கொள்ளுங்கள். 7 நாட்களுக்குள் activate செய்ய வில்லை என்றால் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் வேலை செய்யாது.இதிலுள்ள வசதிகளை பற்றிய அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

You might also like

Comments are closed.