யூ-டியூப் அறிமுகபடுத்தியுள்ள ஆறு விநாடி பம்பர் வீடியோ:

893

 1,497 total views

பல இலட்சக் கணக்கில் பயனர்களைக் கொண்ட யூ-டியூப் தளத்தில்  இன்று புது ரக  வீடியோ  ஒன்றினை அறிமுகபடுத்தியுள்ளது.      யூடியூபின்  தயாரிப்பு மேலாளர் திரு.Zach Lupei அவர்கள் கூறியதாவது “யூ-டியூப் தளத்தில் வீடியோக்களைக் காணும்  பயனர்களின் வசதிக்கினங்க ஆறு விநாடி பம்பர்  விளம்பர  வீடியோவினை அறிமுகபடுத்த உள்ளோம் . இது ஆறு விநாடிகளுக்கு மட்டுமே திரையில் தோன்றும்  என கூறியுள்ளார்.
இதன் உள்நோக்கம் என்னவென்றால்   இணையத்தில் வீடியோக்களை காணும் ரசிகர்களை அதி நீள விளம்பர இடைவெளிகளை காணுவதை தவிர்க்கும் பொருட்டு வெறும் ஆறே நிமிட வினாடிகளுக்கு மட்டும் விளம்பரத்தினை பரப்புவதை குறிக்கோளாக கொண்டுள்ளனர். இதானால் மிகப்பெரிய விளம்பரங்கள் அடிக்கடி வருவதானால் பயனர்கள் அதனை முற்றிலுமாக பார்ப்பதை தவிர்க்கும் பொருட்டு ஆறு விநாடி  விளம்பரம் என்ற பட்ச்சத்தில் அதனை தவிர்க்காமல்  அனைத்து வகை பயனர்களும் பார்ப்பார்கள் என்ற நோக்கிலும் கூடவே வீடியோ தளத்தில் வீடியோவினைக் காண்பவர்கள் விளம்பரங்களைக் காண குறைவான நிமிடங்களே செலவிட்டால் போதுமானதே!! மேலும்  Skip  ஆப்சனை  தேர்ந்தெடுக்க முடியாது என்பதால்   இந்த பம்பர் விளம்பரங்கள் அதிக எண்ணிக்கையில்  பார்வையாளர்களைப் பெறும். இந்த பம்பர் வீடியோ வருகிற மே மாதம் முதல் அறிமுகபடுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

You might also like

Comments are closed.