வீடியோக்களின் formatகளை மாற்றுவதற்கு….

809

 2,082 total views

இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை நாம் விரும்பிய formatகளில்
மாற்றி சேமிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. சில வீடியோக்களில் audio மட்டும் தான் நமக்கு தேவைப்படும். அப்படி audio மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழு வீடியோவையும் தரவிறக்கம் செய்து தான் கேட்க முடியும்.

இனி இணையத்தில் உள்ள வீடியோ முகவரியை கொடுத்து விரும்பிய formatக்கு எளிதாக மாற்ற ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் windowவில் URL என்று உள்ள கட்டத்திற்குள் எந்த தளத்தின் வீடியோவை மாற்ற வேண்டுமோ அந்த தளத்தின் வீடியோ முகவரியை கொடுக்கவும்.

அடுத்து இருக்கும் Output என்ற கட்டத்திற்குள் எந்த format-ல் நமக்கு சேமிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Download என்று இருக்கும் buttonஐ click செய்தால் போதும், அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த வீடியோ சில நிமிடங்களில் குறிப்பிட்ட formatக்கு மாற்றப்பட்டு இருக்கும்.

இதில் இருக்கும் Download iconஐ click செய்தால்நம் கணினியில் எளிதாக தரவிறக்கலாம். இனி வீடியோக்களில் உள்ள audio மட்டும் தான் வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து எளிதாக இத்தளத்தின் மூலம் பெறலாம். இணையதள முகவரி http://www.convertvideotoaudio.com/

You might also like

Comments are closed.