வலைப்பூவின் Page Views அதிகரிக்க விட்ஜெட் – RECOMMENDED FOR U

653

 1,400 total views

வலைப்பூவின் வளர்ச்சிக்கு பயன்படும் விட்ஜெட்களை மட்டும் உங்களின் வலைப்பூவில் இணையுங்கள்.  https://developers.facebook.com/docs/reference/plugins/recommendations/ இந்த விட்ஜெட் மூலம் வலைப்பூவின் pageviews அதிகரிக்கும் என உறுதியாகக் கூற முடியும். நம் பதிவிற்கு வரும் வாசகர்கள் பதிவின் கீழ் பகுதிக்கு சென்றால் இந்த விட்ஜெட் தோன்றும். உங்களின் பாப்புலர் பதிவுகள் மட்டும் இதில் தெரிவதால் வாசகர்கள் click செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த விட்ஜெட் அதிக இடமும் எடுத்து கொள்வதில்லை. சமூக தள button-களும் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு.

இந்த விட்ஜெட்டை இணைப்பதற்கான வழிமுறைகள்:
  • முதலில் இந்த link-ல் www.simplereach.com click  செய்து விட்ஜெட் வழங்கும் தளத்தை open ய்து கொள்ளுங்கள்.
  • அங்கு உள்ள Get it now என்ற button click செய்யவும். அடுத்த window-வில் உங்கள் விவரங்களை கொடுத்து உறுப்பினர் ஆகிக் கொள்ளுங்கள்.

  • விவரங்களை கொடுத்த பின்னர் கீழே உள்ள SIGN UP button click செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.
  • அடுத்து வரும் பக்கத்தை minimize செய்து வைத்து கொள்ளுங்கள்.
  • அடுத்ததாக உங்கள் blogger account-ல் நுழைந்து Design ==> Edit Html ==> Download Full Template அழுத்தி உங்கள் blogger template download செய்து கொள்ளுங்கள்.

  • அடுத்து மறுபடியும் minimize செய்து வைத்துள்ள Simple Reach பக்கத்தை open செய்து கொள்ளுங்கள்.
  • முதலில் blogger என்பதை தேர்வு செய்து பிறகு Choose file என்பதை click  செய்து download செய்த உங்களின் Template (.xml) file தேர்வு செய்து Upload your Template என்ற button அழுத்தவும்.

 

உங்களுக்கு அடுத்த பக்கம் open ஆகும். அதில் கீழே படத்தில் காட்டி இருக்கும் link click செய்து விட்ஜெட் பொருத்தப்பட்ட Template download செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது மறுபடியும் Design==>Edit Html சென்று Choose file என்பதை அழுத்தி இப்பொழுது download செய்த விட்ஜெட் பொருத்தப்பட்ட Template தேர்வு செய்து அருகில் உள்ள Upload button அழுத்தி இந்த புதிய Template இணைத்து விடுங்கள்.

அவ்வளவு தான் நீங்கள் வெற்றிகரமாக விட்ஜெட்டை இணைத்து விட்டீர்கள். ஆனால் இந்த விட்ஜெட் உடனே உங்கள் தளத்தில் தெரியாது அதிகபட்சம் 1 மணி நேரத்திற்குள் இந்த விட்ஜெட் இனைந்து விடும்.மற்றும் இந்த simple reach தளத்தில் log in செய்து Reports என்பதை அழுத்தினால் எத்தனை பேருக்கு இந்த விட்ஜெட் தெரிந்துள்ளது எத்தனை பேர் இதில் click  செய்துள்ளனர் என்ற விவரங்களை பார்த்துக் கொள்ளலாம். ஒரே ID-யில் பல வலைப்பூக்களை சேர்த்துக் கொள்ளும் வசதி உள்ளதால் ஒவ்வொன்றுக்கும் ஒரு உறுப்பினர் கணக்கு உருவாக்க வேண்டிய அவசியமில்லை.

You might also like

Comments are closed.