மின்னஞ்சலில் தினமும் புத்தகம் படிப்பதற்கு….

77

 270 total views,  1 views today

உலகில் புத்தகம் விரும்பிகள் அதிகம். புத்தகங்களை அலைந்து வாங்கிய காலம் மாறிவிட்டது. இப்போது புத்தகம் படிப்பதற்கு மிகச்சுலபமான வழியைக் காட்டுகிறது dripread இணையதளம்.

ஆசை ஆசையாக புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு அதை படிக்க நேரம் இல்லாமல் அப்படியே அலமாரியில் வைத்திருக்கும் நபர்கள் இந்தத் தளத்தை நாடலாம். ஆனால் உடனடியாக இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாக. அது இந்தத் தளத்தின் சிறப்பு. அதாவது தினமும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிக் கொண்டே இருக்கும்.

மின்னஞ்சல் வாயிலாக நினைவுப்படுத்தியது போலவும் இருக்கும், மின்னஞ்சல் மூலமே படித்தது போலவும் இருக்கும். இதற்காக அதிக கஷ்டப்பட வேண்டியதில்லை. தளத்தில் நுழைந்து எந்தப் புத்தகம் தேவையோ அதனை தெரிவு செய்து  மின்னஞ்சல் முகவரியை சமர்பித்தால் போதும். அதன் பிறகு நாள் தோறும் அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாக மின்னஞ்சலில் வந்து சேரும். தினமும் மின்னஞ்சல் பெட்டியை திறக்கும் போது புத்தகத்தின் அன்றைய பகுதியையும் படித்து முடித்து விடலாம்.

வழக்கமான புத்தகத்தளத்தில் உள்ளது போல ரகம் வாரியாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து பிடித்தமானதை தெரிவு செய்து கொள்ளலாம். எல்லாமே E-book வடிவிலானவை.

இந்தப் பட்டியலில் உள்ளவை தவிர நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட புத்தகத்தை படிக்க விரும்பினாலும் அதனை இங்கே சமர்பித்தால் தினமும் மின்னஞ்சலில் ஒவ்வொரு பக்கமாக வந்து சேரும். புத்தகப் பிரியர்களுக்கு சுவாரஸ்யமும் பயனும் நிறைந்த சேவை என்பதில் சந்தேகமில்லை.

அந்தக் காலத்தில் தொடர்கதை படிப்பது போல இந்தக் கால மெகா சீரியல் பார்ப்பது போல படிக்க விரும்பும் புத்தகத்தை நிதானமாக ஆனால் நிச்சயமாக படித்து முடித்து விடலாம்.  இணையதள முகவரி
http://www.dripread.com/

You might also like

Comments are closed.