மனதிற்கு பிடித்தமான இசையினை கேட்டு மகிழ்வதற்கு…..
1,007 total views
இசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வல்லமை உண்டு.
சில வகையான இசை நம்மை வீரம் உள்ளவர்களாக மாற்றும், சில வகை இசைகள் மனதை வருடும், சில வகையான இசை ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும். அந்த வகையில் இன்று மனதிற்கு அமைதியை அளிக்கும் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது.
அழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுக்கும். சில இனிமையன இசை நம் மனதிற்கும் உடலுக்கும் அமைதியை தரும். இப்படி அழகான இசையை நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இந்த தளத்தில் கிடைக்கும் பலவகையான இசை பகுதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இசையும் அதற்கு தொடர்பான அழகான படத்துடன் காண்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கிறது. இசையின் ஒலி அளவை ஏற்றம் செய்வது முதல் நமக்குத் தகுந்தபடி மாற்றி அமைக்கும் படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயற்கையில் கிடைக்கும் அத்தனை வகையான சத்தங்களையும் அழகாக பதிவு செய்து நம் மனதினை வருடும். இணையதள முகவரி http://www.ambient-mixer.com/
Comments are closed.