பேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட ……

1,264

 1,635 total views

உலகளவில் 1.65 பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்கில் பல மொழிகள் பேசும் மக்கள் பயன்படுத்துவதும் வெவ்வேறு மொழியினராய் இருந்தாலும்  அவர்கள் அனைவரும் பேஸ்புக்கில் நட்பு பாராட்டுவதும் உறவுகளை வளர்த்துக் கொள்வதும் அனைவரும் அறிந்ததே!    அவர்களுக்கேற்றவாறு   போஸ்ட் செய்யும் செய்திகளினை  பல மொழிகளில் மொழிபெயர்த்து தரவருகிறது பேஸ்புக் நிறுவனம். பல வருடங்களாகவே   பேஸ்புக் பல மொழிகளுக்கு ஆதரவளித்து வந்தாலும்  நாம் போஸ்ட் செய்யும் செய்திகள் அனைத்தும்  அவரவர் மொழிகளிலேயே வெளியிடப்பட்டிருந்தது. அதனால் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் செய்யும் போஸ்டுகளை ஆங்கிலம் தெரிந்த நண்பர்கள் மட்டுமே படித்தறிய  முடியும். இத்தகைய சிரமம் இல்லாமல் பயனர்கள்  தாம் போஸ்ட் செய்யும்  போஸ்ட்டினை அனைத்து வித மொழிகளிலும்  மொழிபெயர்த்து வெளியிடலாம். இந்த புதுவித நுட்பத்தினை பேஸ்புக் குழுவினர்   “multilingual composer,” என்ற மென்பொருளின் வழியே  சோதனையிட்டு வருகின்றனர். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் உலகளவில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்த  ஏற்பாடுகள் செய்யப்படும் என பேஸ்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எப்படி இருக்கும்?
                பேஸ்புக்கில் வழக்கம் போல் விருப்பப்பட்ட செய்தியினை போஸ்ட் செய்தபிறகு கீழிறக்கி   “menu ” பட்டனில் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் 45 மொழிகளின் பட்டியலில் விருப்பமான மொழிகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். மேலும் இவை சாதாரண மொழிபெயர்ப்பினை போன்று அல்லாமல் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை உட்புகுத்தி  பயனர் ஒருவரின் இருப்பிடத்தினை அறிந்து அவர்களுக்கு தேவைப்படும் மொழிகளை அறிந்து பரிந்துரைக்கிறது. அதனால் ஒருவர் செய்யும் போஸ்ட்டினை நமது வசதிக்கேற்ற மொழிகளில் படித்தறியலாம்.

You might also like

Comments are closed.