புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போனால்

918

 2,082 total views

Windows இயங்குதளங்களில் பல வேளைகளில் programme-கள் திடீரென முடங்கிப் போகும். MS Office தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். உலாவிகள் முடங்கிப் போகும்.

இவற்றை மூட முயன்றால் Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம்.

சில வேளைகளில் இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல் பிரச்னைகளைத் தரும். இறுதியாக reboot button அழுத்தி Windows சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.

சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய programme ஒன்றினை install  செய்திட முயற்சிக்கையில், அனைத்து programme-களையும் மூடிவிடவும் என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து programme-களையும் ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும்.

இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில் சில programme-களை மூட முடியாமல் முடங்கிப் போய் தொடக்கத்தில் குறிப்பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச programme ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த programme ஒரு வேலையை நமக்காக எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது.

அது இயங்கும் அனைத்து programme-களையும் மூடுவதுதான். இந்த programme install செய்து விட்டால், பின் இயங்கும் programme-கள் அனைத்தையும் ஒரே click-ல் மூடிவிடலாம்.

இதனை install செய்து இயக்கினால் கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது. “x” பட்டனை அழுத்தினால் programme-கள் மூடப்படுகின்றன.

அபாய சின்னம் கொண்ட button அழுத்தினால் அனைத்து புரோகிராம்களும் கொல்லப்படுகின்றன.

இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்றால் ஒரு புரோகிராமினை மூடுகையில் முறையாக அது மூடப்படும்.

ஆனால் அது முறையாக மூடப்படாவிட்டால் அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது.

இந்த End it All புரோகிராமினை http://enditall.en.softonic.com/  என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அனைத்து windows பதிப்புகளிலும் இதனை நிறுவிக் கொள்ளலாம்.

You might also like

Comments are closed.