புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு ஒரு மென்பொருள் இலவசமாக

0 70

புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். இதற்கு Fast Stone Photo Resizer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. குறிப்பாக படங்கள் அனைத்தையும் ஒரே அளவிற்கு மாற்றிவிடுவதன் மூலம் அனைவரையும் ஈர்க்கலாம். இது support செய்யும் பைல்கள் JPEG, BMP, GIF, PNG, TIFF and JPEG2000.

 

அதுபோலவே வீட்டு விஷேசங்கள் போன்றவைகளுக்கு எடுத்தப் படங்களையும் இம்மென்பொருள் துணைகொண்டு படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்கி அல்லது விரித்து தேவையான பெயர் கொடுத்து மாற்றி சேமித்துக் கொள்ள முடியும்.

இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு படமாக Photoshop போன்ற மென்பொருள்களில் திறந்து அதை edit  செய்வதைக் காட்டிலும் இம்மென்பொருளைக் கொண்டு ஒரு கோப்பறையில் உள்ள புகைப்படங்கள் அனைத்தையும் வேண்டிய அளவிற்கு மாற்றி நாம் சேமித்துக்கொள்ளலாம்.

உதாரணமாக உங்களுக்கு ஒரு Photo Gallery அமைப்பதற்கு 500X400 px அளவிற்கு படங்கள்(images) வேண்டும் எனில் உங்களிடம் உள்ள புகைப்படங்களையோ அல்லது இணையத்தில் எடுத்த புகைப்படங்களையோ ஒரு பொதுவான கோப்பறை ஒன்றை உருவாக்கி அதில் போட்டு வையுங்கள்.

பிறகு இம்மென்பொருளை open செய்ததும் தோன்றும் window-வில் புகைப்படங்கள் அடங்கிய கோப்பறையை தேர்ந்தெடுத்து புகைப்படங்களின் அளவுகளை(500pxX400px) கொடுத்து ok கொடுத்தால் போதும்.

மென்பொருளை தரவிரக்கம் செய்ய – http://www.faststone.org/FSResizerDetail.htm

Related Posts

You might also like

Leave A Reply