பிறந்தநாளை நினைவுபடுத்த ஒரு தளம்!

618

 1,162 total views

பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரின் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்து வாழ்த்துச் சொல்வது சற்று சிரமமான விசயம் தான். பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களை நமக்கு ஞாபகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்றே உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் மறந்து விட்டது என்று சொல்லும் நம்மவர்களுக்கு நண்பர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய தினங்களை நினைவுபடுத்த ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Signup என்ற button அழுத்தி புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து நம் நண்பர்கள், உறவினர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் முக்கிய தினங்களை நாம் இத்தளத்தில் பதிந்து வைத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொருவருக்கும் செல்லப் பெயர் அல்லது அவர்களின் பெயர் மற்றும் பிறந்த தினம் என அனைத்தையும் சேமித்து வைப்பதன் மூலம் குறிப்பிட்ட தினத்திற்கு முந்தைய தினம் நமக்கு மின்னஞ்சல் மூலம் ஞாபகப்படுத்தும். நாளை உங்கள் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லுங்கள் என்று நம் மின்னஞ்சலில் செய்தி வரும்.

அதன் பின் அலைபேசியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ நாம் வாழ்த்து சொல்லலாம். அவருக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். பிறந்தநாளை மறக்காமல் வைத்து வாழ்த்து சொன்னதால் அவர்களின் மனதிலும் நீங்கள் இடம் பிடிக்கலாம். தளத்தின் முகவரி http://live.ss-birthdayreminder.com/

You might also like

Comments are closed.