கோணங்களை மாற்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை மாற்றுவதற்கு இலவச மென்பொருள்

748

 1,619 total views

கைபேசியில் camera வசதி இருப்பவர்கள் எளிதாக வீடியோ எடுக்கலாம். ஒரு சில நேரங்களில் camera-வின் கோணங்களை மாற்றி அமைத்து வீடியோக்களை எடுத்து விடுவர். இப்படி மாற்றி எடுக்கப்பட்ட வீடியோவை கணினியில் பார்ப்பதற்கு சிரமமாக இருக்கும்.

ஆனால் இதனை எளிதாக VLC பிளேயரில் அந்த நேரத்திற்கு மட்டும் Rotate செய்து பார்க்கலாம். இதனை நிரந்தரமாக மாற்றுவதற்கு X2X Free Video Flip and Rotate மற்றும் Free Video Flip and Rotate (DvdVideoSoft) என்ற மென்பொருள்கள் உதவி புரிகிறது.

இந்த மென்பொருள்கள் வீடியோக்களை இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக மற்றும் கீழ்க்கண்ட வகைகளிலும் சுழற்றச் செய்து மாற்றம் செய்து தருகின்றன.

– rotate video 90 CW.
– rotate video 180.
– rotate video 90 CCW.
– flip video horizontal.
– flip video vertical.
– flip video vertical and rotate 90 CW.
– flip video vertical and rotate 90 CCW.

X2X Free Video Flip and Rotate: இந்த மென்பொருளின் மூலம் வீடியோக்களை உங்களது தேவையான அளவிற்கு வெட்டிக் கொள்ள முடியும். AVI, MPG, MPEG, MP4, WMV, ASF, MOV, QT, 3GP, 3G2, AMV, FLV போன்ற அனைத்து வகை வீடியோக்களையும் இந்த மென்பொருள் ஆதரிக்கிறது. மாற்றப்பட்ட வீடியோவை MP4 வகையில் கொடுக்கும்.

இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்ய – http://www.x2xsoft.com/productlist/fliprotate.html

You might also like

Comments are closed.