கைபேசிகளுக்கான வேகமான browser

1,415

 4,301 total views

கைபேசிகளில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவதும் தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் mobile browser opera ஆகும்.

இப்பொழுது நாம் பார்க்கப் போகும் இந்த UC Browser தற்பொழுது மிக வேகமாக வளர்ந்து வரும் mobile browser ஆகும்.

உலகம் முழுவதும் இந்த மென்பொருளை இதுவரை 20 கோடிக்கும் அதிகமான நபர்கள் உபயோகப்படுதுகின்றனர். இதுவரை பத்தாயிரம் கோடி இணைய பக்கங்கள் இந்த பிரவுசர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்த browser உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து உள்ளது. அறிமுகமான குறைந்த நாட்களிலேயே வளர்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை தொடர்ந்து வளர்ச்சியில் உள்ளது இந்த browser தான்.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

இணைய பக்கங்களை 85% சுருக்கி வேகமாக திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இதன் சிறந்த தொழில்நுட்பம்.

Multi Tabs வசதி.

மிகச்சிறந்த தேடியந்திரம்.

மிகச் சிறந்த தரவிறக்க manager மென்பொருளை கொண்டுள்ளதால் தரவிறக்கம் வேகமாக இருக்கும்.

Menu bar-ல் பயனுள்ள வலைதளங்களின் link ஏற்க்கனவே இருப்பதால் ஒரே click-ல் அந்த தளங்களுக்கு சென்று விடலாம்.

Bookmark செய்து கொள்ளும் வசதி மற்றும் Browsing History பார்க்கும் வசதி.

Browser-ல் URL auto-completion வசதி உள்ளதால் URL முழுவதுமாக type செய்ய வேண்டிய அவசியமில்லை.

இணைய பக்கங்களை சேமித்து bluetooth மற்றும் SMS வழியாக மற்றவருக்கு அனுப்பலாம் மற்றும் இன்னும் பிற வசதிகள் உள்ளதால் பெரும்பாலானவர்களால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. பதிவிறக்கம் செய்ய http://www.ucweb.com/index.html

You might also like

Comments are closed.