காணாமல் போன CD Driveஐ கணினியில் திரும்ப கொண்டுவருவது எப்படி?

869

 2,352 total views

 

கணினியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது CD/DVD டிரைவ் ஆகும்.  சில நேரங்களில் CD டிரைவில் CDயை போட்டு பார்த்தால் கணினியின் my computerல் CD டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது CD டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணினியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதனை எப்படி சரி செய்வது?

1.  முதலில் Device Managerல் CD டிரைவ் இயல்பு நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள். Devise Manager செல்ல desktopல்  உள்ள my computer ஐகானை வலது கிளிக் செய்து manage மெனுவை கிளிக் செய்யவும். அதில் இடதுபக்கமுள்ள பகுதியில் Devise Manager என்பதை கிளிக் செய்தால் வலது பக்கம் நமது கணினியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் தெரியும். அதில் CD/DVD Rom devices என்பது enable ஆக உள்ளதா என பார்க்க வேண்டும்.

2.  உங்கள் கணினியின் CPUவில் CD/DVD டிரைவை இணைக்கும் cable சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்.

3.  மேற்கண்டவை சரியாக இருந்தும் கணினியில் CD டிரைவ் தெரியவில்லை என்றால் Registerல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் காணாமல் போன CD டிரைவை மீட்கலாம்.

Start->Run சென்று regedit என்று type செய்து எண்டர் செய்யவும். இப்போது கணினியின் Registry Editor திறக்கப்படும். பின்னர் கீழ் உள்ள keyஐ கண்டுபிடிக்கவும். நீங்கள் தேர்வு செய்த Key சரியானது தானா என்பதை உறுதி செய்ய அதன் வலதுபக்கம் CD/DVD டிரைவ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

HKEY_LOCAL_MACHINESYSTEMCurrentControlSetControlClass{4D36E965-E325-11CE-BFC1-08002BE10318}

இந்த keyஐ கிளிக் செய்து வலது பக்கம் உள்ள பட்டியலில் UpperFilters, LowerFilters ஆகிய Subkeyகள் இருந்தால் இரண்டையும் அழித்துவிடவும். அழிப்பதற்கு வலது கிளிக் செய்து Delete கொடுக்கவும். ஒரு முறை கணினியை  Restart செய்து விட்டு பார்க்கவும்.

You might also like

Comments are closed.