கணினியில் சிக்கிக் கொண்ட CDஐ வெளியே எடுப்பதற்கு

717

 1,880 total views

நீங்கள்  CD பயன்படுத்தும்  போது  CD கணினியின் CD driveவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும். எத்தனை முறை CD driveன் eject பட்டனை அழுத்தினாலும் அப்படியே CD drive வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் CD drive திறக்கப்பட்டு CD  வெளியே வரும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் CD drive திறக்கப்பட்டு CD இருக்கும் அந்த plastic tray வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்தச் சூழ்நிலையை சமாளித்து CDயை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.

வழி 1:
My computer ஐகானில் click  செய்திடுங்கள். உங்கள் desktopல் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் start  மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணினியின் driveகள் அனைத்தும் காட்டப்படும்.

இதில் Devices with removable stroage என்ற பிரிவில் CDயின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட CD ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள package என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த drive காட்டப்படும்.

இதன் மீது right click செய்திடுங்கள். கிடைக்கப் பெரும் மெனுவில் Eject என்ற பிரிவில் click செய்திடுங்கள். உங்கள் CD driveவில் உள்ள eject பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் CD drive திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.

வழி 2:
பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். CD driveவின் eject பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள். இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.

இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். Eject  செய்யும் போது இயங்கும் internal lock உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் driveவின் கதவு திறக்கும்.

உடனே CDயை எடுத்துவிட்டு மீண்டும் driveவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் CD வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.

You might also like

Comments are closed.