அனைத்து கூகுள் தகவல்களையும் தரவிறக்கம் செய்வதற்கு
1,203 total views
பலரும் பயன்படுத்தும் சேவை கூகுள் நிறுவனத்தினால் அளிக்கப்படுபவை. நாம் பயன்படுத்தும் அல்லது சேமிக்கும் அனைத்து தகவல்களும் திருடப்பட்டால் நம் நிலை மிகவும் மோசமாகிவிடும். அதனை தவிர்க்க அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் backup எடுக்கலாம். இதனை செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.
1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள் நுழையுங்கள்.
2. அதில் உங்கள் profile அடையாள படம் மேலே உள்ள பட்டையில் இருக்கும். அதன் மீது click செய்து Account Settings என்பதை select செய்யவும்.
3. இப்போது தோன்றும் புதிய windowவில் இடதுபுற பேனலில் இருக்கும் Data Liberation என்பதை select செய்யவும்.
4. இப்போது Download Your Data என்ற பட்டனை click செய்தால்
உங்களின் தகவல்களை ஒரு கோப்பாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
5. ஒரு குறிப்பிட்ட சேவையின் தகவலை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்பினால் அந்த சேவையினை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
Comments are closed.