நிகழ்ச்சிகள்

 57,822,020 total views

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்சிகள் , கருத்தரங்கங்கள் பற்றிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

Nov
16
Sun
2014
நம் மீனவர்கள் உயிர் காக்க ஒன்று கூடுவோம். @ வள்ளுவர் கோட்டம்
Nov 16 @ 7:01 pm – 8:01 pm

 2,743,409 total views

10353651_888003771210834_2526838658241970173_n

உயிரைப்பணயம் வைத்து நமக்கு உணவளிக்கும் மீனவர் உயிர்காக்க ஒன்று கூடுவது நம் அனைவரின் கடமை.

எட்டு தமிழ் மீனவர் (5 தமிழக மீனவர்+3 ஈழத்தமிழர்) ஆகிய நம் உழைக்கும் தமிழர்கள் உயிர் காப்பதும், உரிமை மீட்பதும் அவர்கள் நமக்கிட்ட உணவின் மீது நாம் செலுத்தும் ஒரு நன்றிக்கடனே.

மீனவர் விடுதலையை மட்டும் நாம் கோரவில்லை. மீனவரை படுகொலை செய்த இலங்கைப் படையினரை கைது செய்திருந்தால் இந்த கொடுமைகள் நிகழாது போயிருக்கும்.

கடமை மறந்த இந்திய அரசினை கேள்விக்குள்ளாக்குவது தலைநகரில் வாழும் நம் அனைவரின் அரசியல் கடமை.

அனைவரையும் அழைக்கிறோம்.

Nov
23
Sun
2014
தமிழ் ஸ்டூடியோ ஏழாம் ஆண்டு தொடக்க விழா & நாடு கடந்த கலை நூல் வெளியீட்டு விழா @ Saligramam, Chennai
Nov 23 @ 6:00 pm – 9:00 pm

 1,444,658 total views

எதிர்வரும் 23 ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோவிற்கு ஏழாவது பிறந்த நாள். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி சாதாரண குறும்பட/ஆவணப்பட இணையதளமாக தொடங்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ 2010ஆம் ஆண்டு, தமிழின் நல்ல சினிமாவை முன்னெடுக்கும் இயக்கமாக உருமாறியது. தமிழ் ஸ்டுடியோவின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவை எதிர்வரும் 23ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் அரங்கில் கொண்டாடவிருக்கிறோம். . ‘நாடு கடந்த கலை’ என்கிற என்னுடைய முதல் நூல் வெளியீட்டு விழாவில் பல்வேறு திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

23-11-2014, ஞாயிறு. மாலை 6 மணிக்கு.

பிரசாத் லேப், சாலிகிராமம். (AVM ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலை)

சிறப்பு அழைப்பாளர்கள்:

படத்தொகுப்பாளர் B.லெனின்
ஓவியர் ட்ராட்ஸ்கி மருது
நடிகர் சார்லி
இயக்குனர் மிஸ்கின்
இயக்குனர் ராம்
இயக்குனர் விக்ரம் சுகுமாரன்
எழுத்தாளர் பவா செல்லதுரை
இயக்குனர் அம்ஷன் குமார்

பதிப்பாசிரியர்: ஓவியர் சீனிவாசன்

நிகழ்வில் இசையமைப்பாளர் பிரபா “கீ போர்டு” இசைக்கவிருக்கிறார்.

அனைவரும் வருக…

Dec
19
Fri
2014
மின்னனு நுட்பத்தில் புதிய சிந்தனைக்காண மாநாடு ICIECA 2014 @ IIT Chennai
Dec 19 @ 9:15 am – Dec 20 @ 10:15 am

 1,681,737 total views

19 – 20, December 2014 அன்று சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் மின்னனு நுட்பத்தில் புதிய சிந்தனைக்காண மாநாடு நடை பெருகிறது இதில் இந்த துறை சார்ந்த சர்வதேச  நிபுணர்கள்  பங்கு  பெருகின்றனர். மேலும் இது விஞ்சானிகளுக்கும், ஆய்வாளர்களுக்கும், பொரியாளர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும்  மிகவும் பயனுள்ளதாக  இருக்கும் என  செய்திகல் தெரிவிகின்றன.