நிகழ்ச்சிகள்

 57,822,082 total views

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்சிகள் , கருத்தரங்கங்கள் பற்றிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

Nov
16
Sun
2014
திணையியல் கோட்பாடும் பழந்தமிழர் வேளாண்மையும் @ Gandhi Muesum
Nov 16 @ 5:30 pm – 8:30 pm

 2,211,889 total views

10612880_1626973044196625_3030544996679923666_n

“முதலெனப்படுவது நிலம்பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே” – (தொல்:பொரு:14)

இது தொல்காப்பியருக்கு முன்பே இடம்பெற்றுவிட்ட ஒரு கருத்து. இதை அவர் பதிவு செய்கிறார். அதை அவர் ‘மனச்சான்றோடு மொழிப’ என்றும் குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்தின் முதற்பொருளாக கடவுள் அல்லவா இருக்க வேண்டும்? தமிழ் மரபு நிலத்தையும் பொழுதையும் அதாவது வெளியையும் காலத்தையும் முதன்மைப்படுத்துகிறதே..

திணையியல் என்ற கருத்தாகக்கத்தை இலக்கிய வகைப்பாடு என்ற அளவிலேயே நமது மரபுசார்ந்த கல்வியியல் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு விரிந்த பார்வையுடன் கூடிய மெய்யியல் என்பதை காணத் தவறிவிட்டது.

“தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப ” – (தொல்:பொரு:18)

இங்கு உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் என்ற இரண்டும் கருப்பொருளின் கீழ் பட்டியல் இடப்படுகிறது. தெய்வம் என்ற கருத்தாக்கம் கருத்தியல் நிலையின்பாற்பட்டது. அதை நேரடியாக காண இயலாது. ஆனால் உணவு நேராக தொட்டு உணரக் கூடிய நாள்தோறும் தேவைப்படுகின்ற ஒன்று. இதற்க்கு அடுத்ததாக மா எனப்படும் விலங்குகளும், மரம் எனப்படும் பயிரினங்களும், புள் எனப்படும் பறவையினங்களும் வகைப்படுத்தியுள்ளனர். தொழில்கள், இசை கருவிகள், போன்ற அனைத்து வாழ்நிலைக் கூறுகளையும் கருப்பொருள்களின் கீழ் தொல்காப்பியம் கொண்டு வருகிறது. நிலத்தின் அடிப்படையாக நிலக் கோளத்தைப் பிரிக்கும் அறிவியலாளர்கள், அதற்கென்றே இருக்கும் உயிரினங்களையும் பட்டியல் இடுகின்றனர். இந்த அண்மைக் காலப் பகுப்பு முறை தொல்காப்பியக் காலத்திற்கு முன்பே இருந்தது தமிழ் திணையமைவின் சிறப்பு என்றால் மிகையாகது.

உயிர், மெய், உயிர்மெய் என்ற வரிசைபாடு திணையவியல் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. நிலங்களை மட்டும் தமிழர்கள் இயற்கையின் அடிப்படையில் வகுக்கவில்லை. தமது மொழிக் கூறுகளையும் அவ்வாறே அமைத்துள்ளனர். இன்னும் ஆழமாக தன் “திணையியல் கோட்பாடு” என்ற நூலில் விளக்குகிறார் திரு.பாமயன் அவர்கள்.

இன்னும் ஆழமாக நம் தினையியல் கோட்பாட்டை புரிந்து கொள்ள வாருங்கள் நம்ம வரலாறு நிகழ்வுக்கு…

நாள்: 16.11.2014, ஞாயிறு, மாலை 5:30 மணி
இடம்: காந்தி அருங்காட்சியகம், மதுரை 20.
தொடர்புக்கு: 9629127109

நம் மீனவர்கள் உயிர் காக்க ஒன்று கூடுவோம். @ வள்ளுவர் கோட்டம்
Nov 16 @ 7:01 pm – 8:01 pm

 2,743,413 total views

10353651_888003771210834_2526838658241970173_n

உயிரைப்பணயம் வைத்து நமக்கு உணவளிக்கும் மீனவர் உயிர்காக்க ஒன்று கூடுவது நம் அனைவரின் கடமை.

எட்டு தமிழ் மீனவர் (5 தமிழக மீனவர்+3 ஈழத்தமிழர்) ஆகிய நம் உழைக்கும் தமிழர்கள் உயிர் காப்பதும், உரிமை மீட்பதும் அவர்கள் நமக்கிட்ட உணவின் மீது நாம் செலுத்தும் ஒரு நன்றிக்கடனே.

மீனவர் விடுதலையை மட்டும் நாம் கோரவில்லை. மீனவரை படுகொலை செய்த இலங்கைப் படையினரை கைது செய்திருந்தால் இந்த கொடுமைகள் நிகழாது போயிருக்கும்.

கடமை மறந்த இந்திய அரசினை கேள்விக்குள்ளாக்குவது தலைநகரில் வாழும் நம் அனைவரின் அரசியல் கடமை.

அனைவரையும் அழைக்கிறோம்.

Nov
23
Sun
2014
தமிழ் ஸ்டூடியோ ஏழாம் ஆண்டு தொடக்க விழா & நாடு கடந்த கலை நூல் வெளியீட்டு விழா @ Saligramam, Chennai
Nov 23 @ 6:00 pm – 9:00 pm

 1,444,661 total views

எதிர்வரும் 23 ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோவிற்கு ஏழாவது பிறந்த நாள். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி சாதாரண குறும்பட/ஆவணப்பட இணையதளமாக தொடங்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ 2010ஆம் ஆண்டு, தமிழின் நல்ல சினிமாவை முன்னெடுக்கும் இயக்கமாக உருமாறியது. தமிழ் ஸ்டுடியோவின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவை எதிர்வரும் 23ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் அரங்கில் கொண்டாடவிருக்கிறோம். . ‘நாடு கடந்த கலை’ என்கிற என்னுடைய முதல் நூல் வெளியீட்டு விழாவில் பல்வேறு திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

23-11-2014, ஞாயிறு. மாலை 6 மணிக்கு.

பிரசாத் லேப், சாலிகிராமம். (AVM ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலை)

சிறப்பு அழைப்பாளர்கள்:

படத்தொகுப்பாளர் B.லெனின்
ஓவியர் ட்ராட்ஸ்கி மருது
நடிகர் சார்லி
இயக்குனர் மிஸ்கின்
இயக்குனர் ராம்
இயக்குனர் விக்ரம் சுகுமாரன்
எழுத்தாளர் பவா செல்லதுரை
இயக்குனர் அம்ஷன் குமார்

பதிப்பாசிரியர்: ஓவியர் சீனிவாசன்

நிகழ்வில் இசையமைப்பாளர் பிரபா “கீ போர்டு” இசைக்கவிருக்கிறார்.

அனைவரும் வருக…