நிகழ்ச்சிகள்
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்சிகள் , கருத்தரங்கங்கள் பற்றிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
“முதலெனப்படுவது நிலம்பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே” – (தொல்:பொரு:14)
இது தொல்காப்பியருக்கு முன்பே இடம்பெற்றுவிட்ட ஒரு கருத்து. இதை அவர் பதிவு செய்கிறார். அதை அவர் ‘மனச்சான்றோடு மொழிப’ என்றும் குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்தின் முதற்பொருளாக கடவுள் அல்லவா இருக்க வேண்டும்? தமிழ் மரபு நிலத்தையும் பொழுதையும் அதாவது வெளியையும் காலத்தையும் முதன்மைப்படுத்துகிறதே..
திணையியல் என்ற கருத்தாகக்கத்தை இலக்கிய வகைப்பாடு என்ற அளவிலேயே நமது மரபுசார்ந்த கல்வியியல் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு விரிந்த பார்வையுடன் கூடிய மெய்யியல் என்பதை காணத் தவறிவிட்டது.
“தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப ” – (தொல்:பொரு:18)
இங்கு உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் என்ற இரண்டும் கருப்பொருளின் கீழ் பட்டியல் இடப்படுகிறது. தெய்வம் என்ற கருத்தாக்கம் கருத்தியல் நிலையின்பாற்பட்டது. அதை நேரடியாக காண இயலாது. ஆனால் உணவு நேராக தொட்டு உணரக் கூடிய நாள்தோறும் தேவைப்படுகின்ற ஒன்று. இதற்க்கு அடுத்ததாக மா எனப்படும் விலங்குகளும், மரம் எனப்படும் பயிரினங்களும், புள் எனப்படும் பறவையினங்களும் வகைப்படுத்தியுள்ளனர். தொழில்கள், இசை கருவிகள், போன்ற அனைத்து வாழ்நிலைக் கூறுகளையும் கருப்பொருள்களின் கீழ் தொல்காப்பியம் கொண்டு வருகிறது. நிலத்தின் அடிப்படையாக நிலக் கோளத்தைப் பிரிக்கும் அறிவியலாளர்கள், அதற்கென்றே இருக்கும் உயிரினங்களையும் பட்டியல் இடுகின்றனர். இந்த அண்மைக் காலப் பகுப்பு முறை தொல்காப்பியக் காலத்திற்கு முன்பே இருந்தது தமிழ் திணையமைவின் சிறப்பு என்றால் மிகையாகது.
உயிர், மெய், உயிர்மெய் என்ற வரிசைபாடு திணையவியல் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. நிலங்களை மட்டும் தமிழர்கள் இயற்கையின் அடிப்படையில் வகுக்கவில்லை. தமது மொழிக் கூறுகளையும் அவ்வாறே அமைத்துள்ளனர். இன்னும் ஆழமாக தன் “திணையியல் கோட்பாடு” என்ற நூலில் விளக்குகிறார் திரு.பாமயன் அவர்கள்.
இன்னும் ஆழமாக நம் தினையியல் கோட்பாட்டை புரிந்து கொள்ள வாருங்கள் நம்ம வரலாறு நிகழ்வுக்கு…
நாள்: 16.11.2014, ஞாயிறு, மாலை 5:30 மணி
இடம்: காந்தி அருங்காட்சியகம், மதுரை 20.
தொடர்புக்கு: 9629127109
உயிரைப்பணயம் வைத்து நமக்கு உணவளிக்கும் மீனவர் உயிர்காக்க ஒன்று கூடுவது நம் அனைவரின் கடமை.
எட்டு தமிழ் மீனவர் (5 தமிழக மீனவர்+3 ஈழத்தமிழர்) ஆகிய நம் உழைக்கும் தமிழர்கள் உயிர் காப்பதும், உரிமை மீட்பதும் அவர்கள் நமக்கிட்ட உணவின் மீது நாம் செலுத்தும் ஒரு நன்றிக்கடனே.
மீனவர் விடுதலையை மட்டும் நாம் கோரவில்லை. மீனவரை படுகொலை செய்த இலங்கைப் படையினரை கைது செய்திருந்தால் இந்த கொடுமைகள் நிகழாது போயிருக்கும்.
கடமை மறந்த இந்திய அரசினை கேள்விக்குள்ளாக்குவது தலைநகரில் வாழும் நம் அனைவரின் அரசியல் கடமை.
அனைவரையும் அழைக்கிறோம்.
பெருந்தகையீர் வணக்கம்,
=======================
தமிழர் விடுதலை கழகம் முன்னெடுக்கும் இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் – ஆய்வரங்கம் தோழமைகள் அனைவரும் வருக.
நிகழ்வில் எனது தந்தையாரும் ஐயா திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வும் நடைப்பெற உள்ளது.
நாள்:
~~~~~
23.11.2014
நேரம்:
~~~~~~
காலை 10 மணி
இடம்:
~~~~~~
”திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் அரங்கம்”, ஆர்.எசு.திருமண மண்டபம், ஓரகடம் சாலை, அம்பத்தூர், அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகில்
தொடர்புக்கு:
~~~~~~~~~~~
தோழர் சுந்தரமூர்த்தி
தமிழர் விடுதலைக் கழகம்,
9841789222/9941452807/9840695674
வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் செயற்பாட்டுகள் பற்றிய கருத்தரங்கம்.
23.11.2014 அன்று காலை 10 மணிமுதல் கோவை ஆர்.எஸ்,புரத்தில் உள்ள அன்ன பூர்ணா ஒட்டலில் நடைபெறுகிறது. இதில் பேராசிரியர். வி.எம்.எஸ் சூபகுணராஜன், எழுத்தாளர்.பாமரன், உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
உலக மனிதாபிமான கழகம் நடத்துகின்றது.
எதிர்வரும் 23 ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோவிற்கு ஏழாவது பிறந்த நாள். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி சாதாரண குறும்பட/ஆவணப்பட இணையதளமாக தொடங்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ 2010ஆம் ஆண்டு, தமிழின் நல்ல சினிமாவை முன்னெடுக்கும் இயக்கமாக உருமாறியது. தமிழ் ஸ்டுடியோவின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவை எதிர்வரும் 23ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் அரங்கில் கொண்டாடவிருக்கிறோம். . ‘நாடு கடந்த கலை’ என்கிற என்னுடைய முதல் நூல் வெளியீட்டு விழாவில் பல்வேறு திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
23-11-2014, ஞாயிறு. மாலை 6 மணிக்கு.
பிரசாத் லேப், சாலிகிராமம். (AVM ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலை)
சிறப்பு அழைப்பாளர்கள்:
படத்தொகுப்பாளர் B.லெனின்
ஓவியர் ட்ராட்ஸ்கி மருது
நடிகர் சார்லி
இயக்குனர் மிஸ்கின்
இயக்குனர் ராம்
இயக்குனர் விக்ரம் சுகுமாரன்
எழுத்தாளர் பவா செல்லதுரை
இயக்குனர் அம்ஷன் குமார்
பதிப்பாசிரியர்: ஓவியர் சீனிவாசன்
நிகழ்வில் இசையமைப்பாளர் பிரபா “கீ போர்டு” இசைக்கவிருக்கிறார்.
அனைவரும் வருக…
பயிர்களுக்கு பூச்சிக் கொல்லி என்ற பெயரில் தெளிக்கப்படும் கொடிய நச்சுத்தன்மையுடைய வேதிப் பொடிகளால் அன்றாடம் நாம் உண்ணும் உணவு நஞ்சாகிவிட்டது. தினசரி நாம் உண்ணுகிற உணவில் 15 விதமான வேதி நச்சு பொருட்கள் கலந்திருக்கிறது. அதிலுள்ள 12 விதமான வேதி நச்சு பொருட்கள் உலக அளவில் தடை செய்யப்பட்டுள்ளதென்று அரசு சார்புடைய ஆய்வு ஒன்று தெரிவிப்பதாக மருத்துவர் கு.சிவராமன் குறிப்பிடுகிறார். இந்த நஞ்சை சாப்பிட்டு சாக வேண்டுமென்று நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்ன தலையெழுத்து இருக்கிறது. உணவு யுத்தத்தை பன்னாட்டு கும்பணிகள் நம் மீது நடத்திக் கொண்டிருப்பதை அறியாமல் அவசர வாழ்வில் நாம் மூழ்கிவிட்டோம். சொந்த நாட்டு மக்கள் நஞ்சு கலந்த உணவை சாப்பிடுகிறார்கள் என்ற துளி எச்சரிக்கையும் இல்லாமல் பன்னாட்டு கும்பணிகளின் நலனுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கிறது நாம் தேர்ந்தெடுத்த அரசுகள். உற்று நோக்கினால் உணவு தயாரிப்பிலும் நம் அடிப்படை தண்ணீர் தேவையிலும் நம்மிடம் இருந்த தற்சார்பு உடைக்கப்பட்டிருப்பதை உணர முடியும். இப்பொது நமக்கு தேவை இந்த அடிமை நிலையிலிருந்து விடுதலையும், தற்சார்பும்.
நம் வீட்டு தோட்டத்தில், சிறுதுண்டு காலி நிலத்தில், மாடியில் என நமக்கு தேவையான நஞ்சில்லாத உணவை நாமே தயாரித்து கொள்ளுதல்தான் தற்சார்பு வாழ்வுக்கான முதல்படி. அதை கருத்தில் கொண்டு, கல்லுபட்டி அருகிலுள்ள இயற்கை வேளாண் அறிஞர் திரு.பாமயன் அவர்களின் பண்ணையில் காய்கறி மற்றும் மாடித்தோட்ட பயிற்சி முகாமை வருகிற 07.12.14, ஞாயிறு அன்று நடத்துகிறோம். ஒரு வேளை உணவு, சிற்றுண்டி, தேநீர், பயிற்சிக்கு தேவையான பொருட்கள என ஒரு நபர் பயிற்சிக்கு தேவையான செலவாக ரூபாய் 200 வரையறை செய்யப்பட்டுள்ளது. முதலில் முன்பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிப்பதற்கான வசதியுள்ளது. விருப்பமுள்ள நண்பர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ளுங்கள். தற்சார்பு வாழ்வுக்கான முதல்படியை எடுத்து வைக்க அழைக்கிறோம். வாருங்கள்!!
19 – 20, December 2014 அன்று சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் மின்னனு நுட்பத்தில் புதிய சிந்தனைக்காண மாநாடு நடை பெருகிறது இதில் இந்த துறை சார்ந்த சர்வதேச நிபுணர்கள் பங்கு பெருகின்றனர். மேலும் இது விஞ்சானிகளுக்கும், ஆய்வாளர்களுக்கும், பொரியாளர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என செய்திகல் தெரிவிகின்றன.