இணையப் பக்கங்களை ஸேவ் அஸ் என்று எடுத்துக் கொள்வதற்கும் காப்பி பேஸ்ட் செய்வதற்கும் ஒரே அளவு தகவல்தான் செலவாகுமா? எது சிக்கனம்?
ஸேவ் அஸ் என எடுத்துக் கொண்டால் வண்ணம், வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்தும் அப்படியே கிடைக்கும். நகல் எடுத்து ஒட்டுவதில் உரைகளுக்கான அளவு குறையும். படங்கள் வழக்கம்போல் அதிக இடத்தை எடுத்துக் கொள்ளும். எனினும் இரண்டாவது முறை சிக்கனம்தான். சில தேவைகளை விட்டுக் கொடுப்பதாக இருந்தால்.