1,090 total views
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ – இருக்கும்ல ! பயலுக்கு(நம்ம முருகன் தான் !) மொத மொத கல்யாணம் நடந்த இடம்ல அதுனால கொண்டாட்டமா தான் இருக்கும். பின்னாடி அவரு வள்ளினு ஒரு ‘ஷாமியோவ்’ டிக்கட்ட கரெக்ட் பண்ணி சைடுல சேர்த்துக்கிட்டது தனி கதை. சாமி செஞ்சா தப்பில்லையாம், ஆசாமி செஞ்சா தப்பா ? சொல்லுங்கண்ணே தப்பா… ?
ஒட்டி கட்டிருப்பாங்க. மலைக்கு பின்னாடி குடவரைக் கோவில் ஒன்னு இருக்கு. நாங்க எங்க வள்ளிகள், சுள்ளிகள் எல்லாம் பத்தி பொரணி(பரணி இல்லீங்க !) பேசுறது அங்கன உக்கார்ந்து தான். எனக்கு ஒரு நண்பர் இருக்காரு. அவருக்கு திருப்பரங்குன்றம் தான் ஊரு. வார கடைசினா மலைக்கு பின்னாடி இருக்கற அந்த கோவிலுக்கு போய் மரத்தடில பட்டறைய போட்ருவோம். காத்து நல்லா சிலுசிலுனு அடிக்கும். மயில் நிறையா வரும். சில சமயம் தோகை விரிச்சி ஆடுறத கூட பாத்திருக்கோம். பேச ஆரம்பிச்சா படிப்பு, காலேஜ், வீடு எல்லாம் கடந்து பேச்சு கடைசி கன்னியை பத்தி தான் வந்து நிக்கும்.
(மனசாட்சி – “ஏன்டா நண்பனோட அந்தரங்கத்த இப்பிடி அப்பட்டமா அம்பலத்துல ஏத்திட்டியே… இதெல்லாம் உனக்கு ஒரு பொழப்பா…?)
தெற்கு பக்கம் கைலாசநாதர் கோவில் ஒன்னு இருக்கும். அந்த பக்கம் மலை நெட்டுக்குத்தலா நிக்கும். அங்கன இருந்து எட்டிப் பார்த்தா தலையெல்லாம் சுத்தும். முத்துக்காளை மட்டும் பக்கத்துல இருந்தா ‘செத்து செத்து வெளாடுவோமா ?’னு கேப்பாரு. கோவில் பாறை நிழல்ல, பக்கத்துல சுனை இருக்கறதால நல்லா குளிர்ச்சியா இருக்கும். ரொம்ப அமைதியாவும் இருக்கும். யாருமே இல்லாட்டி அப்புறம் அமைதியாத்தான இருக்கும். பூசாரியே போஸ்ட் லன்ச் செஸன்ல ஆப்ஸென்ட் ஆகிடுவாரு.
சாப்ட்டு மல்லாந்து படுத்தா சத்தியமா சொல்றேன் சொர்க்கத்துக்கே போனாப்ல இருக்கும். அப்டியே அந்த சொர்க்கத்துலயே சொக்கிப்போய் ஒரு ரவுண்டு சுத்திட்டு வீட்டுக்கு வந்தா மணி ஏழரை ஆகிப்போயிருக்கும். அப்போ தான் உண்மையான ஏழரை எனக்கு ஸ்டார்ட் ஆகும். கதவு தொறக்கிற சத்தமே யாருக்கும் கேக்காது. பரம்பரை திருடன் கூட கொஞ்சம் சத்தமா தொறப்பான்.
(பி.கு – இந்த கட்டுரையில் வரும் நண்பனின் காதலிகளின்(?!) பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன !!!)
அன்புடன்
வெண்ணிலா பக்கங்கள்
Comments are closed.