எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் எண்கள்

62

ஏழுவரை தொடர்ச்சியாகக் கூறிய வள்ளுவர் அடுத்து ஆயிரம் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.  “ஆயிரத்தில் ஒருவர்” என்ற வழக்கு சிறப்புடையது.  ஏழு பிறப்பிலும் புகழைத்தரும் மக்கள் தம் வாழ்வில் எட்டுவேலைகளும் ஒருசேர செய்யும் ஆற்றல் உடையவராய் இருப்பர்.  இவர்கள் “அஷ்டாவதானி” என அழைக்கபடுவர்.

திசைகள் எட்டு என்பது எண் திசைகளாக அறியப்படுகின்றது. அஷ்டதிக் பாலகர்கள் எட்டுபேர்.  இந்த எட்டைபற்றி குறள் ஏட்டில் கூறப்பட்டிருப்பதென்ன?
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்கா தலை. ( 9 )
கேட்காத செவி பார்காத கண் முதலியன போல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம். இறைவனின் திருவடியைத் தொழாதவருக்கு வரும் தீமைகள் மிகக் கொடுமையானவை.  இவ்வாறு எட்டின் சிறப்பை சொன்ன ஆசான் “பத்து”
என்னும் எண்ணைத் தன் பனுவலில் விளக்கியுள்ளார்.  “பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்” என்ற தொடர் புகழ் மிக்கது. இத்திருகுறளுக்கு உரை எழுதியவர்களும் பதின்மரே.
பல்லார் பகை கொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல் ( 450௦ )௦
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கை விடுதல் பலருடைய பகையை  தேடிகொள்வதை விட பத்து மடங்கு தீமை உடையதாகும்.

You might also like