ஆறு மற்றும் ஏழாம் எண்கள்

35

ஆறு என்னும் எண்ணை நினைத்த உடன் அறுமுகக் கடவுள் நினைவும் அவரது காக்கும் கை பன்னிரண்டும் நினைவுக்கு வருகிறது. இதோடு இல்லாமல் ஐந்து திணையின் அங்கத்தில் ஒன்றான பெரும்பொழுது ஆறு என்பதன் நினைவும் நீங்காது.

நல் ஆறு எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.  ( 324 )
நல்வழி என்று அற நூல்களால் சொல்லபடுவது எது என்றால் எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
படை குடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. ( 381 )
படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்று கூறப்படும் “ஆறு” அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண்சிங்கம் போன்றவன்.
ஆண்சிங்கம் போன்ற மனிதன் தான் செய்த தான தர்மங்கள் மூலமாக ஏழு பிறவிகளிலும் நன்மை அடைய விரும்புகிறான்.
ஏழு என்னும் எண் ஏழ்பிறப்பையும, ஏழ்உலகங்களையும் ஏழ்கடலையும் குறிக்கிறது. ஒரு பிறவியில் நாம் செய்யும் ஒரு செயல் ஏழு பிறப்பிற்கும் எவ்வாறு துணை நிற்கிறது என்பதை வள்ளுவர்
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப் புடைத்து ( 398)
ஒரு பிறவியில் நாம் கற்கின்ற கல்வியால் கிடைக்கும் நன்மையானது ஏழு பிறப்பிலும் பயன் தரும்.
இவ்வாறு ஏழு பிறப்பும் நன்மைதருவது கல்வி மட்டுமன்று அவரவர் பெறுகின்ற புதல்வர்களால் பெற்றோர்க்கும், மற்றோர்க்கும் ஏழு பிறப்பும் நன்மையையும் புகழும் கிடைக்கும் .
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின் ( 621 )
நன்றி
ச. சித்ரா

You might also like

Comments are closed.