coding மொழியை கற்பிக்கும் ஆப்பிள் நிறுவனம்

505

 525 total views

பிரபல தொழில்நுட்ப  நிறுவனமான ஆப்பிள் தற்போது இந்திய பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் coding கற்பிப்பதில் ஆர்வம் காட்டுகிறது.

இந்தியாவில் நிரலாக்கத்தை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளை தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் மேற்கொள்கிறது. ஆப்பிள் பல இந்திய பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வேலை செய்து வருகிறது.மேலும் இளம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கோடிங் கற்று கொள்ள அவர்களை ஊக்குவிக்கின்றனர்.

அமெரிக்காவில் ஆப்பிள் ஏற்கனவே இளம் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த active coding education programல் கவனம் செலுத்தி வருகிறது.இதைதொடர்ந்து  இந்தியா முழுவதும் கோடிங்ஐ மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.மேலும் 2017 ல் பெங்களூரில் ஒரு புதிய ஆப் Accelerator மையம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் இப்போது இந்தியாவில் தொழில்நுட்ப திறமை வளர்ப்பதற்கு அடுத்த குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்கு, இந்தியா ஒரு முக்கிய iOS டெவலப்பர்கள் சந்தையாக உள்ளது.இந்திய iOS டெவலப்பர்களால் App Store க்கு 100,000 க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.

ஆப்பிள் ஒவ்வொரு வருடமும் கையகப்படுத்திய டெவலப்பர்களுக்கு ஸ்காலர்ஷிப்பை வழங்குகிறது. இந்த ஆண்டு, 16 இந்திய மாணவர்கள் WWDC (world wide developer conference)2019 நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், நான்கு வருட கல்வி பட்டம் குறியாக்கத்தில் திறமைசாலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, இந்த முயற்சிகள் இளம் மாணவர்களிடையே கோடிங் திறனை வளர்ப்பதில் கோடிங் கல்வி முயற்சிகள் விளைவிப்பதை உறுதிப்படுத்துகின்றன.

You might also like

Comments are closed.