Tag: மின் வணிகம்

ஜப்பான் பணத்தை இந்திய மின் வணிகத்தில் கொட்டுகிறது SoftBank

மின் வணிகத்தில்  ஈடுபட்டுள்ள ஸ்னாப்டீல் நிறுவனத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஸாஃப்ட்பாங்க் 627 மில்லியன் டாலர்  அளவிலான முதலீட்டைச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் ஈடுபட்டுள்ள ஸாஃப்ட்பாங்க் நிறுவனத்தின் தலைவர் மஸயோஷி ஸோன் தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தியாவில் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளைச் செய்யவுள்ளதாக மஸயோஷி ஸோன் கூறியிருந்தார்.  

​ரத்தன் டாட்டா SnapDeal.com இல் முதலீடு செய்ய இருக்கிறார்.

இந்தியாவில் மின் வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. FlipKart, Amazon, eBay, SnapDeal போன்றதளங்கள்  அதிகமான வருமானம் ஈட்டி வருகின்றன. FlipKart நிறுவனம் 1பில்லியன் டாலர் (6000 கோடி ருபாய்) அளவிற்கு புதிய முதலீடுகளை பெற உள்ளதாக அறிவித்த இரண்டு நாட்களில் அமேசான் நிறுவனம் தாங்கள் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் (12000 கோடி ருபாய்) முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தது. மேலும், நாங்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் மின் வணிகம்