2016-இல் மூக்கின் மேல் விரல் வைக்க தூண்டும் சிறந்த மிண்ணனு தொழில் நுட்ப கருவிகள்:

649

 1,384 total views

2016 ஆம் ஆண்டு துவங்கி ஒரு வாரம் நிறைவடைந்து இருக்கும் சூழ்நிலையில் உலக மக்களை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது சர்வதேச நுகர்வோர் மின்னணுவியல் நிகழ்ச்சி. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய படைப்புகள் அறிமுகம் செய்யப்படும்.அந்த வகையில் 2016 ஆம் ஆண்டின் கண்காட்சியில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களது கருவிகளை வெளியிட்டு வருகின்றன. இங்கு இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டதில் அனைவரும் கவனிக்க வேண்டிய சில வேடிக்கையான மின்னணு சார்ந்த தொழில்நுட்ப கருவிகள் இதோ..!

 கண்ணுக்கு புலப்படாத டீ .வீ :

2016 -இல்  உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க வருகிறது  பேனாசோனிக்  கண்ணுக்குப் புலப்படாத டி.வீ .     பேனசோனிக் அறிமுகப்படுத்தியுள்ள கண்ணுக்கு புலப்படாத டீவீயானது  55 அங்குல திரையுடன்   வீட்டின் அறையில் அலங்கரிக்க வருகிறது. இதற்கு முன்  L.G  அறிமுகபடுத்தியிருந்த சுருட்டி மடிக்கும் டிவிகளுக்கு அடுத்த படியாக   மின்ணனு சார்ந்த நுகர்வோர்  தொழில்நுட்பத்தில்   ஆச்சரியபடுத்தக் கூடிய அளவுள்ள ஒரு அறிய வகை கண்டுபிடிப்பு என்றே சொல்லலாம் .  55அங்குலமா ? அப்படியானால் அதனை   வீட்டில் எங்கே வைப்பது என்ற  கவலை வேண்டாம். இந்த டிரான்ஸ்பரன்ட்  டி.வீ யை  உங்கள்  வீட்டின் புத்தகங்கள்  வைக்கும் அலமாரியில்  வைத்துக் கொள்ளலாம்.  பார்ப்பதற்கு சுவரில் சொருகப்பட்ட ஒரு ஓவியம் போன்று காட்சியளிக்கும். இதன் திரையானது  மைக்ரோ ஒளியை வெளியேற்றும் டையோடுகளின் வழியாக  உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுவதுமாக  டிரான்ஸ்பரன்ட் ஆக இல்லாமல் 1080பிக்சல்களைக் கொண்டுள்ளது. இது பார்பதற்கு மந்திரக் கண்ணாடி போன்று உள்ளது.  இதிலுள்ள திரையினை  கண்ணுக்கு தெரியும்படியும் தெரியாதபடியும் செய்யலாம். மேலும்   வழக்கமான ரிமோட் கண்ட்ரோலுடன் இல்லாமல் குரல் கட்டளைகளை  கையாண்டு தனித்துவமிக்கதாக மாற்றும் முயற்சியில் பேனாசோனிக் செயல் பட்டு வருகிறது.

Eyefluence:

Eyefluence என்பது    நமது கண்களின் எதிர்காலத்திய  முன்னேறிய தொழிநுட்ப  சமந்தபட்ட ஒரு வகை அணுகலே. ஒரு விரலை கொண்டு ஸ்மார்ட் போனில் உலகை வலம் வரமுடிவது சாத்தியமென்றால் கண்களைக் கொண்டு  Eyefluence-யின் உதவியுடன் உலகை பல்வேறு கண்ணோட்டத்தில் காண(இயக்க) தயாராகுங்கள்.  உட்கார்ந்த இடத்திலேயே  அனைத்தையும்  கட்டுபடுத்தும் சக்தி இந்த  Eyefluence- சென்சார்களுக்கு  உள்ளது. ஆம்   Eyefluence சென்சார்களைக் கொண்டு  கண்ணின் கருவிழிகளுடைய சிறு அசைவுகளைக் கண்காணித்து அதன் மூலம் பல செயல்களை அமர்ந்த இடத்திலேயே செய்து முடிக்கலாம். எனவே ஒரு கண்ணசைவில்  நினைத்தவற்றை  முடித்துவிடலாம். இது போன்ற நுட்பங்கள்  virtual reality headsets  மற்றும் Augmented reality glasses போன்ற சாதனங்களில்  கூட  இல்லை என்பது குறிப்பிடத்தக்கதே!

DSCN0636-800x600

Vayyar’s 3D sensing:

இஸ்ரேல் நாட்டினர் அறிமுகபடுத்திய   Vayyar’s 3D sensing உதவியுடன் ரேடியோ அலைகளின் உதவியுடன் ஒரு திட பொருள்களின் உள்கட்டமைப்புகளை   காணலாம். பார்பதற்கு சூப்பர்மேன் திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போன்று இருந்தாலும் உண்மையில் பல வேலைகளை செய்கிறது.இதன் மூலம்   மார்பக புற்றுக் கட்டிகளால்  பாதிப்புற்ற பெண்ணின் நிலையை அறியலாம்.மேலும் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின்  இதயத் துடிப்பை குழந்தைக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமலே  அறியலாம்.  மேலும் தொலைந்து போன சிறு சிறு பாகங்களைக் கூட  கண்டறியலாம் .  இந்த தொழில் நுட்பம் மிகவும் மலிவானதாக  இருப்பதால் இதனை அனைவரும் பயன்படுத்தலாம் என  Vayyar-இன் தலைமை அதிகாரி திரு.ராவி மெலமத்  கூறியுள்ளார்.

ODG’s ultra-wide wide-angle Augmented Reality Glasses:

Osterhout Design Group தயாரித்துள்ள  இரவில் பார்க்கக்கூடிய கண்ணாடி அரசு நிறுவனங்களுக்கு  மிகப்பெரிய ஹெட்செடாக மாறியது.  அப்படி என்னதான் இருக்கு இந்த கண்ணாடியில்..?  சாதரணமாக   ஒரு திரைப்படத்தை வெறும் கண்ணால் பார்பதற்கும்  ODGயின் கண்ணாடிகள் மூலம் பார்பதற்கும் பெரிய வித்தியாசமுண்டு.   பயனர் ஒருவர் இந்த கண்ணாடியை அணிந்து  திரைப்படத்தினைக் காணும் பொழுது அது ஒரு பெரிய திரையரங்கிற்கு சென்று  பார்த்த களிப்பைத்  தரும். இதனால்  ஒரு காட்சியை அதிகளவிலான கோண அளவில் பயனர்களுக்கு பிரமாண்டமாக  அமைத்து தருகிறது.

DSCN0565-800x600

Cypress’s energy-harvesting solar beacon:

சைப்ரஸ் நிறுவனம் தயாரித்துள்ள  பெக்கான்  சாதனத்தைக் கொண்டு  உங்களது ஸ்மார்ட் போனை மேலும் ஸ்மார்டாக  மாற்றலாம்.   இந்த சாதனத்தினை ஸ்மார்ட் போனின்  ப்ளூடூத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலம்   நமக்கருகே உள்ளே அனைத்து விதமான தகவல்களையும்  அன்றாடம் ஸ்மார்ட்  போன்களில்  பெறலாம்..  உதாரணமாக நமக்கருகே உள்ள கடைகளில் உள்ள சிறப்பு ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகளையோ அல்லது   இரயிலில்  பயணித்து கொண்டிருக்கும் ஒருவருக்கு  பயணம் சமந்தப்பட்ட அனைத்து தகவல்களையோ  முழுவதுமாக வழங்கவல்லது. இந்த கருவியை அடிக்கடி சார்ஜ் ஏற்ற  வேண்டிய அவசியமில்லை . சூரிய சக்தியின் உதவியுடன் தானாகவே சக்தியை பெற்றுக் கொள்ளும் திறன் வாய்ந்தது.  எனவே சிறந்த ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகளைத்  தேடி நாம் கடைகளுக்கு அலையத் தேவையில்லை. இனி அனைத்து தகவல்களையும்  உங்கள் ஸ்மார்ட் போனிலேயே பெறலாம்.

cypress-784x600

மேற்கண்ட அனைத்து சாதனங்களும் 2016 இல் கூடுதலான  மேம்படுத்துதல்களுடன்  காணப்படாலம். மேலும் இவையனைத்தும் 2015-இன் தொழில் நுட்ப வளர்ச்சியைக் காட்டுவதாகவே  உள்ளது. 2016-இல் மூக்கின் மேல் விரல்  வைக்கும்  தூண்டும்  இந்த அனைத்து    சிறந்த  மிண்ணனு  தொழில் நுட்ப  சாதனங்களும்  எதிர்காலத்திய புதிய புதிய   கண்டுபிடிப்புகளுக்கு  வழிகாட்டியாக அமைய வாய்ப்புள்ளன.

You might also like

Comments are closed.