உங்கள் புன்னகை உங்கள் விரல் நுனியில் !

வளர்ந்து கொண்டு வரும் மனித வாழ்வில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள பல வழிகளை கண்டறிந்து வருகின்றனர். இருமியது ஒலியாகி அந்த ஒலியை வைத்து பேசத்தொடங்கி பின் அது எழுத்துகளுக்கு வழிவகுத்தது.அப்படிப்பட்ட எழுத்துகளை நாம் முதலில் இறகுகளை பயன்படுத்தி எழுதி வந்தனர் . பின் படிப்படியாக காகிதங்களிலும் அச்சகங்களிலும் என முன்னேறி தந்தி , மின்னஜ்சல் வரை வளர்ந்துள்ளது. ஆனால் தற்போது 2015 ன் விஞ்ஞான உலகில் ஈமோஜி மோகம் நிறைந்துள்ளது குறிப்பிடத்தகக்கதே….!

ஈமோஜியில் மனித உணர்வுகளை வெளிக்கொணரும் வகையிலான அழுகை, சிரிப்பு, ஏக்கம் , சுவை போன்ற பல உணர்வுகளை வெளிப்படுத்தும் ஈமோஜிகள் உள்ளன. தற்போது இந்த ஈமோஜிக்கள் கொண்ட விசைப்பலைகையை வெளியிட்டுள்ளனர்.
47 முக்கியமான ஈமோஜி படங்களுடன் சாதரணமாக டைப் செய்யும் போது வரும் எழுத்துடன் சேர்ந்த இந்த ஈமோஜிக்கள் Mac OS X, iOS, மற்றும் மாத்திரைகள் ,லேப்டாப்புகள் என அனைத்திலும் இயங்கவல்லது .

Emoji_Keyboard-top.0

Emoji_Keyboard_Plus-top.0

Emoji_Keyboard_Pro-top.0
இதன் முன் உத்தரவுகளை இந்நிறுவனம் நேற்றிலிருந்து துவக்கியது.இந்நிறுவனம் 3 வகையான விசைப்பலகைகளை வெளியிட்டது . இதில் முதலாவதாக உள்ள விசைப் பலகைகள் 79.95$ க்கும் மேலும் அடுத்தாதாக விசைப் பலகைகள் பிளஸ் $89.95 க்கும் ப்ரோ விசை பலகைகளை $99.95க்கும் கிடைக்கின்றன .விசைப்பலகைகளுக்கு சார்ஜ் ஏற்ற 2 AAA பேட்டரிகளும் அவசியம் .

ஈமோஜிகள் இந்த வருடம் தகவல் தொடர்பு நுட்பத்தில் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த ஈமோஜிக்க்ள சமீபத்தியமாக தேடு பொறிகளிலும் ஈடுபடுத்தப்பட்டது  குறிப்பிடத்தக்கதே! இதனால் இனி ஈமோஜி விசைப்பலகைகளை வாங்கி உங்கள் உள்ள உணர்வுகளை விரல் நுனிகளின் வழியே வெளிப்படுத்துங்கள் .

Related Posts

Leave a Reply