சாம்சங் S7 கேலக்சி மொபைல்கள் பற்றிய வதந்திகள் :

496

 768 total views

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சாம்சங்கின் s7 கேலக்சி  மொபைல்  வருகிற பிப்ரவரி மாதம் சந்தைக்கு வரவுள்ளது. இதற்கு முந்தைய பதிப்புகளின்  வெற்றியினை அடுத்து வாடிக்கையாளர்களிடம் சாம்சங் s7  பற்றிய ஒரு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சாம்சங் S7 பற்றிய  தகவல்கள் வாசகர்களின் பார்வைக்காக :

சாம்சங் கேலக்சி வடிவில் s7 – என்ற ஒரு சாதனத்தினை  மட்டுமே   பெறாமல்    இரண்டு  போன்களை  அறிமுகபடுத்த உள்ளனர்.  இவை முறையே5.2-அங்குல திரை கொண்ட போனை கேலக்சி  S7  என்றும்  மற்றும்    5.5- அங்குல திரை கொண்ட சாதனத்தினை கேலக்சி எட்ஜ் S7 எனவும் அறிமுகபடுத்த உள்ளனர். மற்றுமொரு பரவலாக எதிர்பார்த்தும் ,கிசுகிசுக்கபட்டுக்  கொண்டிருப்பதுமான முக்கியமான தகவல் என்னவென்றால் ஐபோன் 6s யை போன்றே கேலக்ஸி7-யிலும்   பிரசர் சென்சிடிவ்  தொழில்நுட்பம்    (pressure sensitive technology ) பயன்படுத்தப்படுமா ? என்பது தான்.. !

images (2)

கேலக்சி    S7ஐ – 3.3மில்லியனிலும்   கேலக்சி எட்ஜ் S7-ஐ 1.6மில்லியனுக்கும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர் .கேலக்சி பற்றிய பல தகவல்கள் மற்றும்  வதந்திகள் என பல கசிந்து கொண்டிருந்தாலும் இன்னும் அதிகாரப்பூரவமாக சாம்சங்கிலிருந்து  எந்த தகவலும்  வெளியிடப்படவில்லை. எப்படியிருந்தாலும் நாம் பிப்ரவரியில் கேலக்சி விற்பனை மாபெரும் விற்பனையைப் பெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது.இன்னும் இரண்டு  மாதங்களில் சாம்சங் அதன் விற்பனையில் கொடி நாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இதற்குமுன்  ஆப்பிளின், ஐபோன்களின் வரவால் பல சறுக்கல்களை  சந்தித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் அன்றாய்டு தளங்களிலும் சியோமி, ஒன்  பிளஸ் மற்றும் ஸ்க்ராப்பி போன்ற நிறுவனங்களின் மலிவான அன்றாய்டு பொருட்கள்  விற்பனையாலும்  சாம்சங் சற்று வீழ்ச்சியை சந்தித்திருந்தது.இழந்த இடத்தை சாம்சங் s7 மீட்குமா ? என்பதை இரண்டு மாதங்களுக்கு பிறகு பார்க்கலாம்.

You might also like

Comments are closed.