மறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :

1,080

 1,990 total views

 இந்தியாவில் கேலக்ஸி நோட் 7 கருவிகளை விமானங்களில் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை சில தினங்களுக்கு முன் விலக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறிய காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன. “safe” முத்திரையுடன் சரி செய்யப்பட்ட கருவிகள் பயனர்களுக்கு விநியோகிக்க வழங்கப்பட்டது.  தற்போது மீண்டும் வெடித்து சிதறியுள்ளது.
x1-28-1475040280-jpg-pagespeed-ic-hoxhmxcoz1
       நோட்-7 செல்போனின் பேட்டரி எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதால், விமானத்தில் சார்ஜ் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.  அதன் பின்  அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டதை அடுத்து  செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பின்னர் விற்பனைக்கு வந்த நோட்-7 செல்போன்களை பயன்படுத்த தடையில்லை எனவும், விமான போக்குவரத்து இயக்கம் அறிவித்திருந்தது.  தற்போது மீண்டும் வெடித்து சிதறிய இந்நிகழ்வு  சவுத்வெஸ்ட் விமானம் 994 இல்  நிகழ்ந்திருக்கிறது . திடீரென   கேலக்ஸி நோட் 7 கருவியிலிருந்து புகை வெளியேறியதைப் பார்த்தவுடன், பயணிகள் யாருக்கும்  எந்த வித காயமும்  ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   “safe” சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடித்துச் சிதறியதற்கு சாம்சங் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் – ‘குறிப்பிட்ட சில  கருவியை இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை, கருவியின் ஆய்வு முடிந்த பின்னரே பிற  தகவல்கள் பகிர முடியும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You might also like

Comments are closed.