2016-இல் பிரபலமாகவிருக்கும் ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்கான எல்லையில்லா சேமிப்புகளைக் கொண்ட முதல் அன்றாய்டு போன் :

 நெக்ஸ் பிட் நிறுவனம் அறிமுகபடுத்த உள்ள  ராபின் மொபைல் சாதனமானது ஒரு கிளவுட் (cloud )சேமிப்பை சார்ந்த ஒரு முதல் அன்றாய்டு சாதனமாகும்.இதனை 2016-ன்  முதல் காலாண்டில்  அறிமுகபடுத்த  திட்டமிட்டுள்ளனர்.   சாம்சங் ,LG,சோனி ,HTC  போன்ற மற்ற ஸ்மார்ட் போன்  நிருவனங்களைப்  போன்று  மொபைல் சாதனங்களை  வெளியிட்டாலும்  அவர்களிடத்து இல்லாத சிறப்பம்சமான  எல்லையில்லா கிளவுட் (cloud )சேமிப்புகளைக் கொண்டுள்ளது. அப்படியானால் எப்போது வேண்டுமானாலும்  எந்த சாதனத்திலிருந்தும் தரவுகளைப் பெறலாம். நீல நிறம் மற்றும் கரு நிறங்களில் தோற்றமளிக்கும் இந்த சாதனத்தின்  முன் பதிவுகளை $400 செலுத்தி  பெறலாம்.
ராபின் சாதனத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் நெக்ஸ்ட்பிட்டின் முதன்மை மேலாளர் மற்றும்  தலைமை செயல் அதிகாரியுமான  டாம்  மாஸ் மற்றும் மைக்  சான் ஆகியோர்  இருவரும் இதற்குமுன்   கூகுளின் அன்றாய்டு தளத்தில் பணிபுரிந்தவர்கள்  என்பதால் நெக்ஸ்ட் பிட்  பயனர்களின் நம்பிக்கையைப் பெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்மார்ட் போன்களில் அறிமுகபடுத்த உள்ளதால்    எல்லையில்லா சேமிப்புகளைக் பயன்படுத்திக் கொள்ளலாம்.  உதாரணமாக  அன்இன்ஸ்டால்  செய்த ஒரு பயன்பாட்டை   உங்கள் சாதாரண மொபைல் பயன்பாட்டில் திரும்பிப் பெறுவது கடினமே. ஆனால் நெக்ஸ்ட் பிட்டின் உதவியுடன்  அன் இன்ஸ்டால் செய்த பயன்பாடுகளை மீட்டெடுக்கலாம்.  இது உங்களது  சாதனத்தின் பயன்பாடுகளுக்கு மட்டுமல்லாமல் முக்கியமான கோப்புகள் , தரவுகள், புகைப்படங்கள் மற்றும் முக்கியமான பல தகவல்கள் போன்றவற்றை சேமித்து வைத்துக் கொள்ளவும் கைகொடுக்கும்.  இதுவரை  வந்த ஸ்மார்ட் போன்  சாதனங்களிலேயே  கிளவுட் சேமிப்புடன் கூடிய முதல்  சாதனம் இதுவென்பதால் இது ஸ்மார்ட் போன்  வாடிக்கையாளர்களிடையே 2016-இல்  ஓரு  பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முக்கிய சில சிறப்பம்சங்கள் பின்வருமாறு :
செயலி: ஸ்னாப் 808
சேமிப்பு: 32GB / 100GB  (இணையமிருக்கும்போதும்/இணையமில்லாதாபோதும்)
ரேம்: 3GB
பேட்டரி: 2680 mAh திறன்
திரை: 5.2 “1080p ஐபிஎஸ்
 பின்புற கேமரா: 13MP
முன் கேமரா: 5MP
 USB : 3.0 வகை C இணைப்பு

Leave a Reply