இனோவா நிறுவனம் தயாரித்துள்ள மாணவர்களுக்கான நவீன டேப்லேட்

627

 1,626 total views

உலகெங்கும்  பல இடங்களில் தனது கிளைகளை நிறுவி லேப்டாப் , கம்ப்யூட்டர்  என பல எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருக்கும்     இனோவா     நிறுவனம்   Conve Genius  என்ற  நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான ஒரு டேப்லெட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.   ConveGenius என்பது கல்வி சம்மந்தமான , மற்றும்  மாணவ  சமுதாயத்திற்கு உதவும்  வகையிலான   லேப்டாப்பினை    தயாரித்து வழங்கும் நிறுவனமாகும்.  இவ்விரு மாபெரும் நிறுவனங்களும்    இணைந்து வடிவமைத்துள்ள “CG Slate ” டேப்லெட்டின்  விலை ரூ. 8,499.  இது பிளிப்கார்ட்  வலைதளத்தில் விற்பனைக்கு தயாராகியுள்ளது.

lenovo_cg_slate_1_press

குழந்தைகளுக்கு உதவும் விதம் :
                    “CG Slate ” டேப்லெட்டில்  மாணவர்களுக்கு விளையாட்டுடனான கற்பித்தலை தருவதோடு பல கார்ட்டூன் கதைகளுடன் அறிவுபூர்வ தகவலை தருகிறது.  NCERT  நிறுவனத்தின் உதவியுடன் குழந்தைகளுக்கான   அறிவினை கூர்மையாக்கும்படியான கேம்கள்,சிறுவர்களை ஈர்க்கக்கூடிய  திரைப்படங்கள், பாடப்பகுதிகள் ,ஆர்வமிகு கதைகள் போன்ற அனைத்தையும்  இனோவா நிறுவனம் தயாரித்துள்ள “CG Slate ” டேப்லேட்டில் காணலாம். ஏழு அங்குல திரை கொண்ட டேப்லட் ஆண்டிராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்துடன் ஏழு அங்குல திரையையும் 1024×600  பிக்சல் வர்க்க தீர்மானத்தினையும் கொண்டுள்ளது . குவாட் கோர் MT8127 செயலி மற்றும்   1GB ரேம்முடன்  8GB  நினைவகத்தையும்  கொண்டுள்ளது. 32GB விரிவுபடுத்தப்பட்ட மைக்ரோ SD அட்டையினையும் 2MP பின் காமிரா மற்றும் 0.3MP முன் காமிராவையும் கொண்டுள்ளது. 3450mAh பேட்டரி சக்தியும் 105×9.3x189mm எடையும் கொண்டது.  இந்த நவீன  யுகத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தின் உதவியுடனான இந்த சாதனம்  பெற்றோர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தினரிடையே கண்டிப்பாக சாதனை படைக்கும்.

You might also like

Comments are closed.