குருதி சிந்திய வேலையாட்களும், அவர்களின் பணி நீக்கமும் …..!

2016-இல் மிகப்பெரிய மிகப்பெரிய  பன்னாட்டு  நிறுவனங்களில் ஏற்பட்ட  குறிப்பிடத்தக்க பணிநீக்கங்கள், தொழிலாளர் குறைப்பு, போன்றவற்றைப் பற்றிய     தீர்வறிக்கைகள்   இதோ…..

 நோக்கியா:
                       மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்த நோக்கிய நிறுவனம் தனது வர்த்தகசரிவால் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்ததனால்  தனது மொபைல் வர்த்தகம், மொபைல் தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் சில முக்கியத் தொழில்நுட்பங்களை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. இந்நிலையில் நோக்கியா நிறுவனம் டெலிகாம் துறை சார்ந்த வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அல்காடெல் லூசென்ட் நிறுவனத்தைக்  கையகப்படுத்தலில் ஏற்பட்ட  $ 1 பில்லியன் செலவைக் குறைக்க  ஆயிரக் கணக்கான  தொழிலார்களை பணி நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தது.
Vmware: 

            Vmware என்பது    கிளவுட்  மற்றும் மென்பொருள் சேவைகளை வழங்கி வரும் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பன்னாட்டு  மென்பொருள் நிறுவனமாகும். இதன் தலைமை நிர்வாக அதிகாரி பாட் ஜெல்சிங்கர்படி,  2015 இல் 800  தொழிலாளர்களின் பணி நீக்கத்தை  அறிவித்ததனை அடுத்து இந்நிறுவனம் அதன் பாரம்பரிய மெய்நிகர் கம்ப்யூட் வணிக சரிவை ஒப்புக் கொண்டது.ஆனால் அதன் பின்னர் பொது மற்றும் கலப்பின கிளவுட் சந்தைகளில் ஒரு பெரிய  சரித்திரம் படைக்க  அமைக்க, எண்ணி  VMware அந்த பகுதிகளில் புதிய பணியாட்களை அமர்த்தியது.

இன்டெல்:
        இன்டெல் நிறுவனத்தின் பர்சனல் கம்பியூட்டர் பிரிவின்  நிலை    சில காலமாகத் தொடர்ந்து குறைந்து வந்ததை அடுத்து  நிர்வாகத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் பெயரில்  இதில்  பணியாற்றும் சுமார் 12,000 ஊழியர்களை   அதாவது சுமார் 11 சதவீத ஊழியர்களை  பணி நீக்கம் செய்தனர்.  2015ஆம் நிதியாண்டில் சந்தையில் பிசி விற்பனையை விட மொபைல் வர்த்தகம் சிறப்பாக இருந்த காரணத்தால் இன்டெல் கடுமையான வர்த்தகப் பாதிப்பை சந்தித்தது. இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் இன்டெல் நிறுவனம் லேப்டாப்-டேப்லெட் சாதனங்கள், மற்றும் கேமிங் பிரிவுகளில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்த உள்ளதாக அறிவித்திருந்தது.
ஐ.பி.எம்:
         ஐபிஎம் நிறுவனம், ஆண்டுதோறும், குறைந்தது 6,500 முதல் அதிகபட்சம் 21 ஆயிரத்து 500 பேர் வரை பணியில் இருந்து நீக்குவது வழக்கம். கடந்த ஏழு வருடங்களாக ஐபிஎம் இதுபோலத்தான் செய்து வருகிறது.  2012ம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனத்தில் 434,246 பேர் பணியாற்றி வந்தனர். இந்த எண்ணிக்கை 2013ல் 431,212-ஆக குறைந்தது.
பிராட்காம்:
          பிராட்காம் என்பது ஆப்பிள் உட்பட  பல நிறுவனங்களுக்கு சிப்புகள் (“chip”)   தயாரித்து  வழங்கக் கூடிய நிறுவனமாகும்.  இந்நிறுவனம் அவகோ டெக்னாலஜியுடன்  இணைந்ததால்   ஏற்பட்ட $37பில்லியன் நஷ்டத்தை  அடுத்து 1900 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
 பிளாக் பெர்ரி:

   மிகவும் பிரபலமான  மொபைல் நிறுவனமான   பிளாக் பெர்ரி நிறுவனமானது கடந்த வருடத்தில் மட்டுமே தொடர்ச்சியாக 3 முறை பணி நீக்கம் செய்துள்ளது.   மேலும் பிளாக் பெர்ரி தனது நோக்கினை சர்வர் மற்றும் சைபர்  செக்குயூரிட்டி   பக்கம் திருப்பியுள்ளது.

இந்த பிரச்சனைகள் யாவையும் செய்தது மிகப்பெரிய பன்னாட்டு நிருவனங்களே! அவற்றிற்கே இந்நிலை என்றால் அதனைச் சார்ந்த மற்ற நிறுவனங்களில் பணிபுரிபவரையும் கண்டிப்பாக பாதிக்கும். அவற்றுள் சிலர்  பல மாதங்கள் வேலை செய்தும் சம்பளம்கூட சரிவர வாங்காத நிலையில்,  பணி நீக்கம் செய்தது  தொழிலாளர்களிடையே     வெறுப்பையும் ஒருவித   மன உளைச்சலையும்  ஏற்படுத்தும். மேலும்  பணி நீக்கத்தினால், பல இளைஞர்களின் திருமணம் தடைபடுதல் மற்றும் பலர் மனமுடைந்து   தவறான வழிகளில் செல்லவும் வழிகள்  உள்ளன.  இந்நிலை தொடருமாயின்  அடுத்த சில வருடங்களுக்குள்  பல  நிறுவனங்களுக்கு  மூடுவிழா காணத் துவங்கும்  நிலையும் அதனால்  மேலும் வேலைவாய்ப்பின்மையின் சதவிகிதம் அதிவேகமாக கூடும் நிலையும் ஏற்படும்.

images

Leave a Reply